1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. AI Transformation of Kochadaiiyaan: Rajinikanth’s Lifelike Look in New ErosGenAI Teaser

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

கோச்சடையான் ஏஐ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான இந்தியாவின் முதல் 'போட்டோ-ரியலிஸ்டிக் பெர்ஃபார்மென்ஸ் கேப்சர்' திரைப்படமான 'கோச்சடையான்', தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது.
 
 2014-இல் வெளியானபோது இதன் சிஜிஐ காட்சிகள் விமர்சனங்களை சந்தித்தன. ஆனால், தற்போது ஈரோஸ் யுனிவர்ஸ் நிறுவனம் 'ErosGenAI' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ள 48 வினாடி டீசர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த புதிய டீசரில் ரஜினிகாந்தின் கண்கள், உடல் அசைவுகள் மற்றும் போர்க்கள காட்சிகள் மிகவும் துல்லியமாகவும், உயிரோட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளன. "சில படைப்புகள் காலத்தால் மெருகேறுகின்றன" எனச் சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
ஏ.ஆர். ரகுமானின் அதிரடி இசையுடன், மேம்படுத்தப்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.  
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!