மறக்க முடியுமா - ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக்கின் தி பேர்ட்ஸ்

ஜே.பி.ஆர்.| Last Updated: வியாழன், 15 செப்டம்பர் 2016 (12:11 IST)
ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் இயக்கிய முக்கியமான படங்களில் ஒன்று, தி பேர்ட்ஸ். அதாவது பறவைகள். மனிதர்களுக்குப் பதில் பறவைகள் இந்தப் படத்தில் ரசிகர்களை பயமுறுத்தும். 


இப்போது வருகிற ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் வினோத, ராட்சஸ பறவைகள் அல்ல ஸீ ஹல், காகங்கள், சிட்டுக்குருவி போன்ற, மனிதர்களிடம் நட்பாக இருக்கும் நல்ல பறவைகள்.
 
இந்தப் படத்தில் மெலானா டேனியல்ஸ்ங்கிற இளம் பெண் ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸுடன் ஒரு கடற்கரை கிராமத்துக்கு வருகிறாள். மிட்ச் ப்ரென்னர்ங்கிற இளைஞனின் சகோதரியின் தங்கைக்கு பிறந்தநாள் பரிசாக அந்த லவ் பேர்ட்ஸை எடுத்திட்டு வருகிறாள். அவள் அந்த நகரத்துக்கு வந்ததுமே ஒரு ஸீ ஹல் அவளை தலையில் தாக்குது.
 
மறுநாள் பர்த்டே பார்ட்டியில் ஸீ ஹல் கூட்டமாக வந்து குழந்தைகளையும், பெரியவர்களையும் கடுமையா தாக்குது. இதுக்கான விளக்கம் யாருக்கும் தெரியலை. அப்படி ஸீ ஹல் இதுவரை நடந்து கொண்டது கிடையாது.
 
ப்ரென்னரின் குடும்பம் அந்த அதிர்ச்சியில் இருக்கையில் அன்றிரவு சிட்டுக் குருவிகள் படையெடுத்து வந்து அந்த குடும்பத்தை தாக்க, எல்லோரும் நிலைகுலைந்து போகிறார்கள். மறுநாள் பக்கத்துப் பண்ணையைச் சேர்ந்தவர் பறவைகளால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
 
பறவைகள் இப்படி கொலை வெறியுடன் நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? எதனால்  இப்படி நடந்து கொள்கின்றன? இந்த பூடகமான விஷயத்துக்கு ஹிட்ச்காக் இந்தப் படத்தில் எந்த பதிலும் தரலை. பறவைகள் நகரத்தின் ஒரு பகுதியை எரித்து நாசமாக்க, அந்த நகரமே பீதியில் மூழ்கிப் போகிறது.
 
இந்தப் படத்தைப் பார்க்கையில், இந்த விபரீதத்துக்கு காரணம் டேனியல்ஸா இல்லை அவள் எடுத்து வந்த லவ் பேர்ட்சாங்கிற கேள்வி நமக்குள் வரும். ஆனால், அதற்கு படத்தில் பதில்தான் இருப்பதில்லை.
 
கடைசியில், ப்ரென்னரின் குடும்பம், டேனியல்ஸ், அவள் எடுத்து வந்த லவ் பேர்ட்ஸ் எல்லாம் காரில் வீட்டைவிட்டுக் கிளம்ப, ஆயிரக்கணக்கான பறவைகள் அந்த இடத்தில் நிரம்பியிருப்பது போல் படம் முடிகிறது.
 
ஹிட்ச்காக் இயக்கிய படங்களிலேயே வித்தியாசமான படம் என்று தி பேர்ட்ஸ் திரைப்படத்தை சொல்லலாம். எப்போது பார்த்தாலும் பரவசப்படுத்துகிற த்ரில்லும், பயமும் இந்தப் படத்திலும் தாராளமாக இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :