தொடர்புடைய செய்திகள்
- UPI அறிமுகமாகி 10 ஆண்டுகள்.. இனி UPI மூலம் கடனும் வாங்கலாம்.. அடுத்த பாய்ச்சல்..!
- கச்சா எண்ணெய் மட்டுமல்ல.. பாமாயிலும் தட்டுப்பாடு: இந்தியாவில் விலைவாசி உயரும் அபாயம்!
- 8வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு.. எப்போது முதல் கிடைக்கும்?
- பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா? கச்சா எண்ணெய் விலை உச்சம்.. மத்திய அரசு சொல்வது என்ன?
- ஒரு வாரம் முழுவதும் UPI பயன்படுத்தாமல் இருந்தேன்.. ஒரு இளைஞரின் அனுபவம் எப்படி இருந்தது தெரியுமா?
ஜவஹர்லால் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி.. உலக தலைவர்கள் வாழ்த்து...!
இந்தியப் பிரதமராக 4,399 நாட்களை கடந்துள்ள நரேந்திர மோடி, ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இன்று அதாவது ஜூன் 9, 2026 அன்று இந்த வரலாற்று மைல்கல்லை எட்டிய அவருக்கு பல்வேறு உலகத் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
2014-இல் முதன்முறையாகப் பொறுப்பேற்று, தற்பொழுது மூன்றாவது தொடர் பதவிக்காலத்தில் நீடிக்கும் இவரது ஆட்சியில், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.
இலங்கையின் அதிபர் அனுர குமார திசநாயக்க தனது வாழ்த்து கடிதத்தில், இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக மக்கள் மோடியின் தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்று என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராபே, 200 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்த மோடியின் ஆளுமை ஒரு சிறந்த முன்மாதிரி என்று பாராட்டியுள்ளார்.
திரிநாத் மற்றும் டொபாகோவின் பிரதமர் காம்லா பிரசாத்-பிஸ்ஸேசர், உலக அரங்கில் இந்தியாவின் குரலை மோடி ஓங்க செய்துள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.
உலக தலைவர்களின் இந்த வாழ்த்துகள், மோடியின் தலைமையில் இந்தியா ஒரு பிராந்திய சக்தியாக மட்டுமின்றி, உலகளாவிய புவிசார் அரசியலில் தவிர்க்க முடியாத நாடாக மாறியுள்ளதை வெளிப்படுத்துகின்றன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
