தொடர்புடைய செய்திகள்
- டெல்லி ஆட்டோக்களில் டொனால்ட் ட்ரம்ப் படங்கள்: இணையத்தில் வெடித்த விவாதம்!
- ரூ.15,000 சம்பாதித்தபோது இருந்த மகிழ்ச்சி, ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும்போது இல்லை.. ஒரு பெண்ணின் வைரல் பதிவு..!
- பர்ஸை ஸ்டேஷனிலேயே மறந்து வைத்துவிட்டு ரயில் ஏறிய இந்திய பெண்.. 1 மணி நேரம் கழித்து நடந்த ட்விஸ்ட்..!
- அப்பாவை சாக்கு மூட்டையில் கட்டி கொரியரில் அனுப்பிய இளம்பெண்.. ரீல்ஸ் மோகத்திற்கு ஒரு அளவே இல்லையா?
- இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்.. ஒரே மேடையில் மணம் முடித்தனர்..! உறவினர்கள் குழப்பம்..!
வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய இளம்பெண்.. என்ன காரணம்?
பெங்களூருவில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நகரின் வெப்பத்தை தாங்க முடியாமல் பெண் ஒருவர் செய்த வினோதமான காரியம் இணையதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பிரியா பால் என்ற பெண், தனது வீட்டின் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் ஏசி அறை எடுத்து தங்கியது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் வீட்டில் இருக்க முடியாமல் போனதாகவும், ஏசி அல்லது கூலர் வாங்க முயற்சித்தபோது அதிக தேவை காரணமாக அவை டெலிவரி செய்யப்பட ஒரு வாரம் காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் பிரியா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாடகைக்கு குளிர்சாதன பெட்டிகள் எடுப்பதும் சாத்தியமில்லாமல் போனதால், வேறு வழியின்றி ஞாயிற்றுக்கிழமையை நிம்மதியாக கழிக்க தனது வீட்டிற்கு அருகிலேயே ஹோட்டல் அறை முன்பதிவு செய்துள்ளார். அங்கே நெட்ஃபிக்ஸ் பார்த்து கொண்டு, ஏசி குளிரில் ஓய்வெடுத்தது ஒரு நல்ல முடிவு என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. "மின்சாரம் தடைபடும் போது நானும் இதை செய்ய யோசிப்பேன்" என்று சிலர் அவருக்கு ஆதரவாக கூறினாலும், வேறு சிலரோ "இவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக ஒரு ஏசியையே வாங்கிவிடலாம்" அல்லது "வாழ்க்கையில் இவ்வளவு பணம் இருந்தால் நன்றாக இருக்கும்" என்று கேலியாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
