1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
  4. 40,000 Pounds of Beer Stolen in California, Pabst Seeks Public's Help

ரூ.1.5 கோடி மதிப்புள்ள பீர் திருட்டு.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு என அறிவிப்பு...

Pabst Brewing Company
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான Pabst Brewing Company-க்கு சொந்தமான சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள பீர், கலிபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள இந்த சரக்கில் ஆயிரக்கணக்கான Pabst Blue Ribbon பீர் கேன்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
 
ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருடன் போலி ஆவணங்களை பயன்படுத்தி Montclair பகுதியில் உள்ள Anheuser-Busch விநியோக மையத்திலிருந்து சரக்கை எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சான் டியாகோவுக்கு செல்ல வேண்டியிருந்த இந்த சரக்கு, சுமார் 25,000 அமெரிக்க டாலர் மதிப்புடையது என கூறப்படுகிறது.
 
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், Pabst நிறுவனம் சமூக வலைதளங்களில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. “40,000 பவுண்ட் பீர் திருடப்பட்டுள்ளது” என பதிவிட்டு, திருடப்பட்ட சரக்கை திருப்பிக் கொடுக்குமாறும் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தகவல் கொடுத்து வழக்கை தீர்க்க உதவுபவர்களுக்கு பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பலரும் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  40,000 பவுண்ட் பீர் இருக்கும் லாரியை திருடியவர்கள், குடித்த பிறகு அந்த லாரியை எங்கே நிறுத்தினார்கள் என்பதையே மறந்துவிடுவார்கள் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
எப்ப முடியும் ராஜன் வகையறா?!.. வெற்றிமாறன் மீது அப்செட்டில் கென் கருணாஸ்!..