1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex Crashes 1,700 Points, Nifty Below 23,300: Key Factors Behind Today’s Market Decline

படுபாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1700 புள்ளிகள் சரிவு..

இந்திய பங்குச்சந்தை சரிவு
மத்திய கிழக்கில் ஈரான் போர் தீவிரமடைந்ததன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை இன்று, கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,765 புள்ளிகள் சரிந்து 74,938 மட்டத்திலும், நிஃப்டி 545 புள்ளிகள் சரிந்து 23,232-க்கும் கீழ் சென்றது. இந்த திடீர் சரிவிற்கு முக்கிய காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரை தாண்டியது பார்க்கப்படுகிறது. 
 
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் பல எரிசக்தி நிலையங்களை தாக்கியதே இதற்குக் காரணம். மேலும், வட்டி விகிதங்களை மாற்றாமல் தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுத்த முடிவும் சந்தையில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டியதால், ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை முதலீட்டாளர்கள் இழந்தனர். வரும் நாட்களில் போர்ச்சூழலைப் பொறுத்தே சந்தையின் நகர்வுகள் அமையும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு!.. அண்ணியாரை புலம்பவிட்ட திமுக!...