வெள்ளி, 6 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 4 பிப்ரவரி 2026 (10:57 IST)

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5000 உயர்வு.. வெள்ளி 20,000 உயர்வு..

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5000  உயர்வு.. வெள்ளி 20,000 உயர்வு..
தமிழகத்தில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, சாமானிய மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவைகள் காரணமாக, இன்று ஒரு சவரன் தங்கம் விலையில் சுமார் 5,000 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.
 
இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தூய தங்கம் 24 காரட் 1 கிராம் ரூ.16,255-ஆகவும், அதன் 8 கிராம் விலை ரூ.1,30,040-ஆகவும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.320க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000 என்ற இமாலய விலையிலும் விற்பனையாகிறது.
 
திருமண விசேஷங்களுக்காக தங்கம் வாங்க காத்திருந்தவர்கள், இந்த திடீர் விலை உயர்வால் கடும் கவலையில் உள்ளனர். தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம், நகைக்கடை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva