ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 அக்டோபர் 2025 (18:04 IST)

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

Gold price rise
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்டோபர் 7, 2025) ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் மேலும் ரூ.520 அதிகரித்து, ஒரே நாளில் மொத்தமாக ரூ.1,400 அதிகரித்துள்ளது.
 
புதிய விலை நிலவரம்:
 
ஒரு சவரன் (22 காரட்): இன்று காலை ரூ.88,480-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.89,900க்கு விற்பனையாகிறது.
 
ஒரு கிராம் (22 காரட்): விலை ரூ.11,125 ஆக உயர்ந்துள்ளது.
 
தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் எகிறியிருப்பது, நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran