திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2026 (10:03 IST)

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 340 ரூபாய் உயர்ந்துள்ளது. 
 
இதன்படி, ஒரு கிராம் தங்கம் 14,200 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 1,10,880 ரூபாயாக இருந்த நிலையில், ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல்,(24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 15,491 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,23,928 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 2,65,000 ரூபாயாக உள்ளது. 
 
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 
 
Edited by Siva