தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்வு


K.N.Vadivel| Last Modified சனி, 13 பிப்ரவரி 2016 (00:26 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி  22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 115 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையானது.  ஒரு சவரன் 920 ரூபாய் உயர்ந்து 22 ஆயிரத்து 144 ரூபாய்க்கும் விற்பனையானது.
 
வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 425 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 525 ரூபாய்க்கு விற்பனையானது.
 
பங்குச் சந்தைகள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போன்ற நிலைக்கு சரிந்தது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது மீண்டும் தங்களது கவனத்தை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியதாக கூறுகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :