பங்குச்சந்தை பெரும் சரிவுடன் நிறைவு

Webdunia|
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 651.47 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18235 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 209.30 புள்ளிகள் சரிந்து 5341 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில், கோல் இந்தியா மறும் மகேந்திரா&மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் சற்றே ஏற்றத்துடனும், ஹீரோ மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இந்தியா லிட், ஐடிசி லிட், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் பார்த்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும் நஷ்டத்துடனும் நிறைடைந்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :