உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்

Caston| Last Modified செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (13:48 IST)
நண்டு சூப் மிகவும் சுவையான சூப், மேலும் இது உடலுக்கு நல்ல தெம்பு தருகிறது. ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும்.

தேவையான பொருட்கள்

நண்டு 200 கிராம்

மீன் 200 கிராம்

இறால் 200 கிராம்

கேரட் 4

வெங்காயம் 4

மிளகு 12

எண்ணெய் 1 குழிக் கரண்டி

உப்பு தேவையான அளவு.

செய்முறை

* முதலில் வெங்காயம், கேரட் இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும்.

*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும்.

* அதனுடன் நண்டு, மீன், இறால், கேரட்
ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

* தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

* காய்கறி மற்றும் நண்டு, மீன், இறால் வகைகள் நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும்.

* இப்பொழுது நண்டு, மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பரிமாறவும்.

* சூப்பில் ஒரு துண்டு நண்டு, மீன், இறால் வருமாறு பரிமாறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :