பாசிப்பருப்பு இட்‌லி

Mahalakshmi| Last Modified வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (10:38 IST)
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
சர்க்கரை - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
செ‌ய்முறை:

முதலில் பா‌சி‌ப் பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணிநேரம் ஊற வையுங்கள். மைய அரை‌க்காம‌ல் ச‌ற்று கொரகொரவென இரு‌க்கு‌ம்போதே மாவை எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அரைத்த இ‌ட‌்‌லி மாவுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, பொடி‌த்த ஏலக்காய், நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

இ‌ட்‌லி த‌ட்டு‌க்க‌ளி‌ல் அ‌ல்லாம‌ல் நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி நன்கு வேக வைத்தெடுங்கள். இ‌ட்‌லி ந‌ன்கு ஆ‌றியது‌ம் அதனை து‌ண்டுகளாக‌ப் போ‌ட்டு சுவை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.


இதில் மேலும் படிக்கவும் :