முருங்கைக்கீரை சமைக்க எளிய வழி...

Webdunia|
முருங்கைக்கீரை சமைக்க எளிய வழி...
காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.

உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க...

உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
சாலட் ருசியாக இருக்க...

தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.

சாம்பார் பொடி தயார் செய்யும் போது...
சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :