மாகாளிக் கிழங்குத் தொக்கு

Webdunia|
தோல் நரம்பு முதலியன நீக்கிச் சுத்தம் செயத மாகாளிக் கிழ்ங்கை பொடி பொடியாய் அரிந்து அலம்பியது ஒரு ஆழாக்கு.

ஐந்து தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, இந்த கிழங்கை ஈரமில்லாமல் வதக்கி கொள்ளவும்.

பன்னிரண்டு மிள்காய் வற்றல், ஒரு தேக்கரண்டி கடுகு, மூன்று தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, சுண்டைக்காய் அளவு பெருங்காயம். இவற்றை எண்ணெயில் வறுத்து நைசாகப் பொடி செய்து கொள்ளவும்.
பிறகு, கல்லுரலை ஈரமில்லாமல் துடைத்துவிட்டு, எலுமிச்ங்காய் அளவு புளி, மூன்று தேக்கரண்டி உப்பு, தயார் செய்திருக்கும் மாகாளிகிழ்ங்கு இவற்றைப் போட்டு மசிய இடித்து, பிறகு தயார் செய்திருக்கும் பொடியையும் போட்டு, சேர்மானம் ஆகும் படி இடித்து எடுத்துக் கொள்ளவும்.


இதில் மேலும் படிக்கவும் :