புளிப்பு கார சப்பாத்தி தயாரிக்க...

Webdunia|
புளிப்பு கார சப்பாத்தி தயாரிக்க...

சிறிதளவு மோரில் ஒரு துண்டு இஞ்சியும், பச்சை மிளகாயும் அரைத்து சேர்த்து, அதில் சப்பாத்தி மாவை பிசைந்தால் புளிப்பும், காரமும் சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. நன்றாக ஜீரணமும் ஆகும்.

பொங்கல் செய்யும் போது...

பொங்கல் செய்யும் போது அரிசியை சிறிது நேரம் ஊற வையுங்கள். உலை நீரில் சிறிது டால்டாவைப் போடுங்கள். பொங்கல் தயார் செய்யுங்கள். பொங்கல் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது. பாத்திரத்தை எளிதாக சுத்தம் செய்யலாம்.

சேப்பங்கிழங்கை சமைக்கும் போது...
சேப்பங்கிழங்கை எந்த பக்குவத்தில் சமைத்தாலும், அதன் கொழ, கொழப்பு அப்படியே இருக்கும். பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அரித்த பின்பு ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து சமைத்தால் கிழங்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :