பிஸ்தா மலாய் குல்ஃபி

Webdunia|
FILE
பிஸ்தா மலாய் குல்ஃபி அனைவருக்கும் விருப்பமான ஒரு இனிப்பு வகை. விடுமுறை நாட்களில் பிஸ்தா மலாய் குல்ஃபியை செய்து குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

தேவையானவை

பால் - 1 லிட்டர்
சக்கரை - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
பிஸ்தா (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
பிஸ்தா எசன்ஸ் - 1 ஸ்பூன்

செய்முறை

பாலை நன்றாக காய்ச்சவும், பாலின் அளவு பாதியாக குறைந்ததும் அதனோடு சக்கரையை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். பின்பு பால் பவுடர், நறுக்கிய பிஸ்தா, பிஸ்தா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சிறிய குல்ஃபி மண் பானைகளில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் 2 மணிநேரங்கள் வைத்து, குளுமையாக பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :