கமர்கட்டு

Webdunia| Last Modified திங்கள், 10 டிசம்பர் 2012 (17:34 IST)
நமது குழந்தை பருவத்தி‌ன் ஒரு அங்கமாக இருந்த கமர்கட்டை வீட்டிலேயே சுலபமாக செய்து மகிழலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் (துருவியது) - 2 கப்
வெ‌ல்லம் - 250 கிராம்
நெய் - 3 ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் வெ‌ல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சவும்.
அதனோடு துருவி வைத்த தேங்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.

இந்த‌க் கலவையை சிறு துண்டகளாக உருட்டினால் சுவையான கம‌ர்கட்டுகள் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :