அரிசிமாவு முட்டை அடை

Webdunia| Last Modified வெள்ளி, 20 மே 2011 (19:40 IST)
முட்டை அடை என்றதும் ஆம்லெட் என்று நினைத்துவிடாதீர்கள். இது முட்டை, தேங்காய்ப் பால் எலாம் சேர்த்து செய்யும் அடை. டேஸ்ட்டாஇருக்கும். செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க!

தேவையானப் பொருட்கள்:

1/2 கிலோ பச்சரிசி
1 தேங்காய்
2 முட்டை
3 ஸ்பூன் மிளகு
1 கொத்து கொத்தமல்லி
1 சிட்டிகை மஞ்சள் தூள்
150 மில்லி எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை:

அரிசியை கழுவி, உலர்த்தி எடுத்து, ரவை பதத்தில் அரைத்து வை‌த்து‌க்கொள்ள வேண்டும்.

பிறகு அதை ஒரு வாணலியில் கொட்டி லேசான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவேண்டும்.

தேங்காயை‌த் துருவி பால் பிழிந்துக் கொள்ள வேண்டும். மிளகை கொரகொரப்பாக பொடி செய்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை பொடிசாக அரிந்து கொள்ள வேண்டும்.
மிளகுப் பொடி, கொத்தமல்லி இரண்டையும் மாவில் கொட்டி அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

முட்டையை நன்றாக கலக்கி மாவில் ஊற்றி, பிழிந்து வைத்துள்ள தேங்காய் பாலையும் ஊற்றி நன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற விட வேண்டும்.

பிறகு ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடை ஊற்றுவது போல் மாவை ஊற்றி 2 பக்கமும் பொன்முறுகலாக சுட்டு எடுக்க வேண்டும்.
முட்டையின் சத்தும் தேங்காய்ப்பாலின் ருசியும் சேர்ந்த இந்த அடை நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :