25 திருமணத்தில் நிறைவடைந்த துணைத் தேடல்

Webdunia|
நேபாளத்தைச் சேர்ந்த ராம்சந்திரா கடுவாவின் சிறந்த இணைத் தேடல் தனது 25வது திருமணத்தில் நிறைவடைந்துள்ளது.

49 வயதாகும் ராம்சந்திரா கடுவா, தனது 23ம் வயதில் இருந்து 25 திருமணங்களை செய்து கொண்டுள்ளார். தனது 25வது மனைவியுடன் கடந்த 7 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கடுவா, இதன் மூலம் தனது துணைத் தேடல் நிறைவடைந்துவிட்டது. இனி தான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

இத்தனை திருமணங்களுக்கும், இந்த முடிவிற்கும் காரணம் என்ன என்பதை அவரது சொந்த மற்றும் சோகக் கதையின் மூலம் பார்க்கலாம்.
கடுவாவின் 26ஆவது வயதில் முதல் திருமணம் நடந்துள்ளது. திருமணமான கொஞ்சா நாட்களிலேயே கடுவாவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அடுத்தடுத்து தான் திருமணம் செய்து கொண்ட பெண்கள் இவ்வாறே சென்றுவிட தொடர்ந்து 25 திருமணங்களை கடுவா செய்திருக்கிறார்.

ஒரு மனைவி என்னை விட்டுச் சென்றதும் நான் மற்றொரு திருமணம் செய்து கொண்டேன். எனது ஏழ்மை நிலையைக் காரணம் காட்டியே அனைத்து மனைவிகளும் என்னை விட்டுப்பிரிந்து சென்றுவிட்டனர் என்று கூறும் கட்டுவாவிற்கு, 25 மனைவிகளில் தற்போது 8 பேர் மட்டுமே நினைவில் இருக்கின்றனர்.
சுமை தூக்கும் கூலித் தொழிலாளியான கடுவா, குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளார்.

தனது 25வது மனைவி சாரதாவுடன் கடந்த 7 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வரும் கடுவாவின் எண்ணம், தற்போது தனது மூன்று குழந்தைகளின் படிப்பிலும், சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற லட்சியத்திலும் உள்ளது.
இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், ஏதோ 25வது திருமணத்திலாவது அவரது தேடல் நிறைவடைந்ததே என்று நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.


இதில் மேலும் படிக்கவும் :