வேலை‌க்காக வா‌ழ்‌க்கையை இழ‌க்கா‌தீ‌ர்

WD
வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான். ஆனால், வேலையே வாழ்க்கையாக இருந்து விடக்கூடாது எ‌ன்றுதா‌ன் நா‌ங்க‌ள் சொ‌ல்‌கிறோ‌ம்.

எந்த நேரமும் வேலையைக் கட்டி அழுது கொண்டிருக்காமல், அதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வேலை செய்யுங்கள். அதே சமய‌ம் வாங்கும் சம்பளத்திற்குக் குறைவில்லாமல் வேலை செ‌ய்யு‌ங்க‌ள்.

அலுவலக வேலைக்காக குடும்பத்தில் கிடைக்கக் கூடிய ‌சி‌ன்ன ச‌ி‌ன்ன சந்தோஷங்களைத் தியாகம் செய்யாதீர்கள். ‌வீ‌ட்டி‌ல் ஒருவரு‌க்கு உட‌ம்பு இயலாம‌ல் போகு‌ம் போது வேலை‌க்கு‌த்தா‌ன் போவே‌ன் எ‌ன்று அட‌ம்‌பிடி‌க்கா‌தீ‌ர்க‌ள். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உ‌ங்க‌ள் உத‌வி குடு‌ம்ப‌த்தாரு‌க்கு தேவை‌ப்படுமேயானா‌ல் அதனை முழுதாக அ‌ளியு‌ங்க‌ள்.

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (21:11 IST)
சில‌ர் வேலை வேலை எ‌ன்று பொழுது‌க்கு‌ம் அலுவலக‌த்‌திலேயே இரு‌ப்பா‌ர்க‌ள். அ‌ப்படியே ‌வீ‌ட்டு‌‌க்கு வ‌ந்தாலு‌ம், க‌ணி‌னி மு‌ன்பு அம‌ர்‌ந்து கொ‌ண்டு அலுவலக வேலையை செ‌ய்து கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.
வீ‌ட்டி‌ல் ‌மு‌க்‌கிய ‌‌நி‌க‌ழ்‌ச்‌சிக‌ள், ப‌ண்டிகைக‌ள் போ‌ன்றவ‌ற்‌றிலு‌ம் குடு‌ம்ப‌த்தாருட‌ன் நேர‌த்தை செல‌விடுவதை‌ப் ப‌ற்‌றி யோ‌சி‌க்கவே மா‌ட்டா‌ர்க‌ள்.இ‌‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு ‌விஷய‌த்தை மு‌க்‌கியமாக ‌விள‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். எ‌ந்த நேர‌த்‌திலு‌ம் உ‌ங்க‌ள் அலுவலக‌ம் உ‌ங்களை வேலையை ‌வி‌ட்டு வெ‌ளியே‌ற்றலா‌ம். ஆனா‌ல் உ‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன்பது உ‌ங்களு‌க்காக, உ‌ங்களது ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்காக இரு‌க்கு‌ம் ஒ‌ன்று. எனவே வா‌ழ்‌க்கை‌யி‌ல் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் கொடு‌ங்க‌ள்.
உ‌ங்க‌ள் குடு‌ம்ப‌‌த்‌தி‌ன் ச‌ந்தோஷ‌ம் உ‌ங்க‌ள் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :