தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
Webdunia|
மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலம் தொட்டே பல விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கல்ல.
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.