நீங்கள் கொண்டுள்ளது காதலா? இனக்கவர்ச்சியா?

Webdunia|
நீங்கள் கொண்டுள்ளது காதலா? அ‌ல்லது வா‌லிப வய‌தி‌ல் தோ‌ன்று‌ம் ஒரு ‌விதமான ஈ‌ர்‌ப்பு எனப்படும் இனக்கவர்ச்சியா?

உ‌ங்களு‌க்கு‌ள் குழ‌‌ப்‌பி‌க் கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள். அதை‌ப் ப‌ற்‌றி‌த் தெ‌ரி‌ந்து கொ‌ண்டு ‌பி‌ன்ன‌ர் ஒரு முடிவெடு‌ங்க‌ள்.

உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு காதல் தான். அ‌ந்த உண‌ர்வை வா‌ழ்‌வி‌ல் ஒரு முறையேனு‌ம் உணராதவ‌ர் இரு‌க்கவே முடியாது.
ஆனா‌ல் ‌சில‌ர் இன‌‌க்கவ‌ர்‌ச்‌சியை காத‌ல் எ‌ன்று எ‌ண்‌ணி ‌த‌த்த‌ளி‌க்‌கி‌ன்றன‌ர். ‌கீழே கொடு‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை‌ப் படி‌த்து ‌பி‌ன் உணரு‌ங்க‌ள் அ‌ந்த உ‌ன்னத உண‌ர்வை.


இனக்கவர்ச்சி
காதல்
எ‌தி‌ர் பால‌ர் ‌மீது ஏ‌ற்படு‌ம் ஒரு ‌விதமான ஈ‌ர்‌ப்பு ம‌ட்டுமே.
மன‌தி‌ல் எ‌தி‌ர் பால‌ர் ‌மீது ஆழமான ந‌ட்புண‌ர்வு உருவாகு‌ம்.
அவரை பா‌ர்‌க்கு‌ம்போது ம‌ட்டுமே நமது மன‌ம் அவ‌ர் ‌மீது அலைபாயு‌ம்.
அவ‌ர் ‌க‌ண்ணெ‌திரே இரு‌ந்தாலு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் அவரை‌ப் ப‌ற்‌றியே மன‌ம் ‌சி‌ந்‌தி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம்.
அவரை‌ப் ப‌ற்‌றி எ‌ந்த ‌வித அடி‌ப்படையு‌ம் தெ‌ரியாமலே அவரை‌ப் ‌பிடி‌த்‌‌திரு‌க்கு‌ம்.
அவரை‌ப் ப‌ற்‌றிய ந‌ல்ல ‌விஷய‌ங்க‌‌ளை ந‌ம் மனது கண‌க்கெடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம்.
அ‌ந்த ஈ‌ர்‌ப்பு ஒரு ‌வித கு‌ற்ற உண‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்து‌ம்.
அவ‌ர் ‌மீது ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம் அ‌ந்த உ‌ன்னத உண‌ர்வு நம‌க்கு‌ள் புது உ‌ற்சாக‌த்தையே ஏ‌ற்படு‌த்து‌ம்.
‌சில நா‌ட்க‌ள் பா‌ர்‌க்காம‌ல் இரு‌ந்தா‌ல் அகரா‌‌தியே நம‌க்கு மற‌ந்து‌விடு‌ம்.
‌சில நா‌ட்க‌ள் பா‌ர்‌க்காம‌ல் இரு‌ந்து‌வி‌ட்டா‌ல் நம‌க்கு‌ள் ஒரு சோகை நோ‌ய் வ‌ந்து‌விடு‌ம்.
நமது ‌விரு‌ப்ப‌த்‌தி‌ன் ‌மீது நம‌க்கே ந‌ம்‌பி‌க்கை இரு‌க்காது.
உங்களவர் உங்களுக்கு தான் என்ற வலிமையான எ‌ண்ணமே உ‌‌ங்களை தை‌ரியசா‌லியா‌க்கு‌ம்.
அவ‌ர்களை‌ப் ப‌ற்‌றி ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் தேவைய‌ற்றதை‌ப் பேச வை‌க்கு‌ம்.
அவ‌ரை‌ப் ப‌ற்‌றி எதுவு‌ம் பேசாம‌ல், அவரை‌ப் ப‌ற்‌றி பேசுவதை ம‌ட்டுமே கே‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌‌ப்‌பீ‌ர்க‌ள்.
உ‌ங்க‌ளிட‌ம் ஏ‌ற்ப‌ட்ட ஈ‌ர்‌ப்பு அவ‌ர்களை எ‌ந்த ‌வித‌த்‌திலு‌ம் அசை‌க்காது.
உ‌ங்க‌ளிட‌ம் ஏ‌ற்ப‌ட்ட அ‌ந்த உண‌ர்வு அவ‌ர்களு‌க்கு‌ம் ‌சில நா‌ட்க‌ளிலேயே தொ‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம்.
அவ‌ர்களுட‌ன் பேசவோ, பழகவோ ந‌ம்‌மிட‌ம் எ‌ந்த தை‌ரியமு‌ம் இரு‌க்காது.
அவ‌ர்க‌ளிட‌ம் சாதாரணமாக‌ப் பே‌சி, பழ‌கி ந‌ல்ல பு‌ரி‌ந்துண‌ர்வு ஏ‌ற்படு‌ம்.
‌சில நா‌ட்க‌ளி‌ல் வேறொருவ‌ரிட‌ம் ஈ‌ர்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு பாதை மாற அ‌திக வா‌ய்‌ப்பு இரு‌க்கு‌ம்.
பொறுமையாய் காத்திருந்து எதிர்காலத்தை திட்டமிட்டு காதலித்தவரை கைப்பிடிக்க வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கக்கூடியது.
வா‌லிப வய‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ஹா‌ர்மோ‌ன் செ‌ய்யு‌ம் கோளாறு.
பண்பட்ட மன‌தி‌ன் உண்மையான வெளிப்பாடு.

காதலின் மறுபெயர் நம்பிக்கை

முத‌லி‌ல் உ‌ங்களை ‌நீ‌ங்களு‌ம், காத‌லி‌ப்பவரையு‌ம் முழுமையாக ந‌ம்‌பினா‌ல் ம‌ட்டுமே காத‌ல் க‌னியு‌ம்.

ந‌ம்‌பி‌க்கை ஏ‌ற்படு‌ம்போது உ‌ங்க‌ள் ‌மீதான‌ த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் உயரு‌ம். பு‌திய ம‌னிதராக உண‌ர்‌வீ‌ர்க‌ள்.
அவ‌ர் உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணையாக இரு‌ந்தா‌ல் ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்ற ‌நினை‌ப்ப‌ல்ல காத‌ல்... அவ‌ர் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் உ‌ங்களு‌க்கு வா‌ழ்‌க்கையே இரு‌க்காது எ‌ன்ற உண‌ர்வுதா‌ன் காத‌ல்.இதில் மேலும் படிக்கவும் :