காதலர்களின் தலங்களை ஆக்ரமித்த விபச்சாரம்

beach
webdunia photoWD
அடுத்தபடியாக கடற்கரையில் கடல் அலைகளுக்கு இடையே தங்களது எண்ண அலைகளை பேசிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஜோடிகளை நாம் பார்த்துள்ளோம்.

கடற்கரைக்குப் போகாத காதல் ஜோடி உண்டா என்று கேட்கும் அளவிற்கு கடற்கரை ஒரு சிறந்த காதலர் தலமாக இருந்தது.

ஆனால் அங்கும் தற்போது விபச்சாரக் கும்பலின் அட்டூழியம் தலை விரித்தாடுகிறது. ஆங்காங்கே ஜோடியாக உட்கார்ந்து கொண்டு ஒரு சிலர் செய்யும் சேட்டைகளைக் கண்டு அங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் அங்கும் கெடுபிடி. ஆனால் கடற்கரையில் தற்போதும் விபச்சாரத்தின் அத்துமீறல் குறையவில்லை ஆனால் காதலர்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய குறைந்து விட்டது என்றேக் கூறலாம்.

திரையரங்குகளிலும் இதே நிலைதான். புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களிலும் விபச்சாரத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் ஜோடிகளைப் பார்த்து, இவர்கள் காதலர்கள்தானா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பேருந்து நிறுத்தம், கோயில்கள் சின்னஞ்சிறு சந்துக்கள், உணவகங்களில் மட்டுமே சந்தித்து சில மணி நேரங்கள் பேசி முடிக்கும் நிலைக்கு காதலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Webdunia|
பூங்காவின் அமைதியான சூழலை பாதிக்கும் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட.. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்தது காவல்துறை.
இதில் பலியாவது என்னவோ காதலர்கள்தான். மாலை நேரத்தை இனிமையாக கழிக்கலாம் என்று வந்தவர்களை ஊர், பேர், தெரு, பெற்றவர்களின் பெயர் என விவரம் கேட்டு விழிபிதுங்க வைத்துவிட்டனர்.இதனால் பூங்காக்களை பார்த்தாலே காவல்நிலையம் போல அலறுகிறது காதலர் பட்சிகள்.
இதில் ஒரு வரப்பிரசாதம் என்னவெனில் செல்பேசிகள்தான். குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் வாய்ப்பையாவது இது அளிப்பதுதான் காதலர்களுக்கான ஒரே மகிழ்ச்சி.


இதில் மேலும் படிக்கவும் :