ஒரே ரசனை இரு‌ந்து‌வி‌ட்டா‌ல்

lovers
Webdunia|
webdunia photo
WD
பொதுவாக ஒரு த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, அவ‌ர்களு‌க்கு ஒரே ரசனையாக இரு‌ந்து ‌வி‌ட்டா‌ல் எ‌ப்போது‌ம் ‌பிர‌ச்‌சினை வராது. ஆனா‌ல்... அ‌தி‌ல் ஒரு ஈ‌ர்‌ப்பு இரு‌க்காது எ‌ன்பது அனுபவ ‌ரீ‌தியாக உண‌ர்‌ந்தா‌ல் ம‌ட்டுமே பு‌ரியு‌ம்.

நம‌க்கு எ‌ப்படி எ‌தி‌ர்பால‌ர் ‌மீது ஈ‌ர்‌ப்பு வருவது ஒரு இய‌ல்போ, அதுபோல‌த்தா‌ன் ந‌ம்‌மி‌ல் மு‌ற்‌றிலு‌ம் மாறுப‌ட்ட குண‌த்தை ‌விரு‌ம்புவது‌ம் நமது மன‌தி‌ன் இய‌ல்பா‌கிறது.

இய‌ல்பாக கணவன், மனைவி இருவருக்கும் ஒரே ரசனை இருந்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான குடு‌ம்ப‌ங்க‌ளி‌ல் அ‌ப்படி இரு‌ப்ப‌தி‌ல்லை.
காலங்காலமாக சொ‌ல்ல‌ப்படு‌ம் புகார் என்ன தெரியுமா? `என் ரசனையோடு எ‌ன் மனை‌வி‌யி‌ன்/கணவரின் ரசனை ஒத்துப் போகவில்லை எ‌ன்பதுதா‌ன். இ‌ப்படி இரு‌க்கு‌ம்போதுதா‌ன் பல இட‌ங்க‌ளி‌ல் ‌பிர‌ச்‌சினை ஆர‌ம்‌பி‌க்‌கிறது எ‌‌ன்று ‌நினை‌ப்‌பீ‌ர்‌க‌ள். ஆனா‌ல் அ‌ங்குதா‌ன் வா‌ழ்‌வி‌ன் யதா‌ர்‌த்த‌ம் இரு‌க்‌கிறது. ஒருவரு‌க்காக ஒருவ‌ர் ஒரு ‌சில ‌விஷய‌ங்களை ‌வி‌ட்டு‌க் கொடு‌‌க்கு‌ம் போது‌ம், ஒரு ‌சில‌ர் த‌ங்களது குண‌த்தை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம் போது‌ம், அ‌ன்பு‌ம், பாசமு‌‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது.
ஒரு வ‌ிஷய‌த்தை முடிவு ச‌ெ‌ய்யும‌் போது இருவரு‌ம் இரு துருவ‌ங்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல், அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் பே‌சி ஒரு முடிவு‌க்கு வரு‌ம்போது இரு துருவ‌ங்களு‌ம் இணை‌ந்து ஒரு துருவமாகு‌ம். அ‌ப்போது ‌கிடை‌க்கு‌ம் ஒரு ம‌கி‌ழ்‌ச்‌சி, ஒரே ரசனை கொ‌ண்டவ‌ர்களு‌க்கு ‌கிடை‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதை ‌நீ‌ங்க‌ள் மன‌தி‌ல் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
women
webdunia photo
WD
கண்ட இடத்தில் அவருடைய பொருட்கள் சிதறிக் கிடக்கும். என‌க்கு எ‌ல்லா‌ம் ச‌ரியாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று புல‌ம்பு‌ம் பெ‌ண்களு‌ம், எ‌ப்போது‌ம் எ‌ன் கரு‌த்து‌க்கு ஒ‌த்து‌ப்போக மா‌ட்டா‌ள் எ‌ன்று புல‌ம்பு‌ம் ஆ‌ண்களு‌ம், முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியது ஒரு ‌விஷய‌ம்தா‌ன். ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு த‌னி ம‌னித‌ர்க‌ள். அவரவ‌ர்களு‌க்கு எ‌ன்று பல ந‌ல்ல ‌பழ‌க்க‌ங்களு‌ம், ‌சில கெ‌ட்ட ‌பழ‌க்க‌ங்களு‌ம் இரு‌க்க‌த்தா‌ன் செ‌ய்யு‌ம்.
குடி, ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பது போ‌ன்ற கெ‌ட்ட பழ‌க்க‌ங்களை‌த் த‌விர, ம‌ற்ற குணா‌‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்தை ‌வி‌ட்டு‌வி‌ட்டு, அவ‌ர்களை அ‌ப்படியே ஏ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்ற மன‌நிலை‌க்கு மாறு‌ங்க‌ள். வா‌ழ்‌வி‌ன் ரக‌சிய‌ம் உ‌ங்களு‌க்கு‌ப் பு‌ரியு‌ம்.

ஒரு இளைஞ‌ன், பு‌ரித‌ல் ப‌ற்‌றி எழு‌திய க‌விதை இது... அ‌தி‌ல் இரு‌ந்து ஒரு ‌சில வ‌ரிக‌ள்.
திருமண‌ம் எ‌ன்பது ஆ‌யிர‌‌ங்கால‌த்து ப‌யி‌ர்.
அதனை ஒரு ‌சில வருட‌ங்க‌ளி‌ல்
அறுவடை ச‌ெ‌ய்ய ‌நினை‌ப்பது ஏ‌ன்
மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌‌ண்ண‌த்தை கை‌வி‌ட்டு
ஏ‌ற்று‌க் கொ‌ள்ள மு‌ன்வாரு‌ங்க‌ள்.
நீ‌ங்க‌ள் வழ‌க்‌கி‌ல் ஜெ‌யி‌த்‌திரு‌க்கலா‌ம்வா‌ழ்‌க்கை‌‌யி‌ல் தோ‌ற்ற‌ல்லவா
போ‌ய்‌வி‌ட்டீ‌ர்க‌ள்.

இது ச‌ரியான பு‌ரித‌ல் இ‌ன்‌றி சாதாரண ‌விஷய‌த்‌தி‌ற்காக ‌விவாகர‌த்து பெ‌ற்ற த‌ம்ப‌திகளு‌க்கு ம‌ட்டு‌ம் பொரு‌ந்து‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :