மன அழுத்தத்திற்கு கட்டிப்பிடி வைத்தியம்

webdunia photoWD
மன அழுத்தம் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் கூறிய ஜோடிகள், நெருக்கமாக இருக்கத் தொடங்கிய பிறகு மன அழுத்தம் குறைந்ததாகக் கூறினர். அதே நேரம் மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு நெருக்கம் காட்டக்கூடாது. இருவரும் மனம் ஒருமித்து நெருக்கமாக இருக்க வேண்டும்.

ஒருவர் மனது அழுத்தத்திற்குள்ளாகும்போது மற்றொருவர் அதனை போக்கும் வகையில் அவருடன் இனிமையாகப் பேச வேண்டும்.

நெருக்கம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி பொருந்துவதில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடுகளும் தம்பதிகளுக்குள் இல்லை.

என்ன நல்லாப் புரிஞ்சிக்கிட்டீங்களா? உங்களது அன்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. அதனை அணைப்பது, முத்தமிடுதல், வருடுதல், கையை பிடித்துக் கொள்வது போன்ற வகைகளில் வெளிப்படுத்தினால் இருவருக்குமே அது அருமருந்தாகும். அப்புறம் உங்களது இணையிடம் இருந்து வரும் பதில் நடவடிக்கையைப் பார்த்து அசந்தேப் போவீர்கள்.

Webdunia|
வாழ்க்கைத் துணையை (மட்டும்) அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுமார் 51 ஜோடிகளிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.51 ஜோடிகளிடம் மன அழுத்தம் தொடர்பாக ஒரு வாரம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இல்லாத ஜோடிகளை விட, நெருக்கமாக இருக்கும், அடிக்கடி அணைப்பது, முத்தம் இடுவது போன்ற ஜோடிகளுக்கு மன அழுத்தம் குறைவாக இருந்தது.இதனால் மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரப்பதும் தெரிய வந்தது.


இதில் மேலும் படிக்கவும் :