மனிஷா கெளசிக் – ஓர் அறிமுகம்

Webdunia| Last Modified வெள்ளி, 11 பிப்ரவரி 2011 (18:25 IST)
FILE
ஜோதிட உலகில் புகழ்பெற்றவராக கருதப்படும் முனைவர் பிரேம் குமார் சர்மாவின் மகள் மனிஷா கெளசிக். சிறுமியாக இருந்த காலத்திலேயே எதிர்காலம் அறிந்து கூறும் ஞானப் பார்வையைப் பெற்றவர், உள்ளுணர்வால் எதையும் அறிந்து கூற்க்கூடியவர் என்று புகழப்படுபவர்.

மின்னனு தொலைத் தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றவர், இங்கிலாந்து சென்று வணிகவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர், கடந்த 3 ஆண்டுகளாக மறைகலையில் ஈடுபடுகொண்டு செயல்பட்டுவருபவர். தனது தந்தையிடம் ஜோதிடம் கற்ற மனிஷாவிற்கு டாரட் அட்டை ஜோதிடம் மிகவும் கவர்ந்திழுக்க, அதில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கினார். இளம் வயதிலேயே ஞானப் பார்வை பெற்றது, டாரட் அட்டைகளை புரிந்துகொள்ள தனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூறுகிறார்.
“எனது இரத்தத்தில் ஜோதிடம் கலந்துள்ளத” என்று கூறும் மனிஷா கெளசிக், தனது பாட்டன், முப்பாட்டனில் இருந்து தனது தந்தை வரை ஜோதிட சாத்திரத்தில் புகழ்பெற்று விளங்குவதால் ஜோதிடமும், எண் ஜோதிடமும் தனக்கு கைவந்த கலையாகியுள்ளது என்கிறார்.

பெயர் சிகிச்சை (Name Therapy) எனும் பெயர் மாற்ற ஜோதிடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரமாக செயலாற்றிவரும் மனிஷா, நமது நாட்டின் வாஸ்து சாத்திரத்தையும், சீனத்தின் ஃபெங்சூயையும் இணைத்து சிக்கலாக அமைந்துள்ள கட்டடங்களுக்கு தீர்வைத் தருவதாக கூறுகிறார்.
தேச அளவிலான நியூஸ் 24, ஐபிஎன் 7 ஆகிய ஆங்கில தொலைக்காட்சிகளில் ஜோதிட பலன் கூறி வருவபர்.


இதில் மேலும் படிக்கவும் :