மணமக‌‌ன் இ‌‌ன்‌றி நட‌ந்த ‌வினோத ‌திருமண‌‌ம்

Webdunia|
webdunia photo
WD
வரத‌ட்சணை வா‌ங்காம‌ல் நட‌க்கு‌ம் ‌‌திருமண‌ங்க‌ள், கல‌ப்பு ‌திருமண‌ங்க‌ள், காத‌ல் ‌திருமண‌ங்க‌ள் எ‌ன்று ‌திருமண‌ங்க‌ளி‌ல் எ‌த்தனையோ ‌வினோ‌த‌ங்க‌ள் இரு‌ந்தாலு‌ம், மணமகனே இ‌ல்லாம‌ல், மணமக‌னி‌ன் சகோத‌ரி மணமகளு‌க்கு மாலை அ‌ணி‌வி‌த்து ‌திருமண‌ம் நடைபெ‌ற்றது.

துபா‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் மணமக‌ன், கு‌றி‌த்த ‌திருமண நா‌ளி‌ல் இ‌ந்‌‌தியா‌‌வி‌ற்கு ‌திரு‌ம்ப முடியாம‌ல் போனதா‌ல் தா‌ன் இ‌ந்த ‌வினோத ‌திருமண‌ம் நடைபெ‌ற்றது.

அதாவது, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மகன் பிரின்ஸ் துபாயில் வேலை செய்து வருகிறார்.
பிரின்சுக்கும், சுனக்கரை நடுவில்முறியைச் சேர்ந்த ராஜன் எ‌ன்பவ‌ரி‌ன் மகள் ரம்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம், நேற்று முன்தினம் சுனக்கரை கோமல்லூர் பகவதி அம்மன் கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக, மணமகன் பிரின்ஸ் கேரளா வருவத‌ற்கு ‌தி‌ட்ட‌மி‌ட்டு இரு‌ந்தா‌ர். இந்த நிலையில் பிரின்ஸ் ஓட்டிச் சென்ற கார் விபத்து ஒன்றில் சிக்கியது. இது தொடர்பாக அந்த நாட்டு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த வழ‌க்கு ‌விசாரணை முடிவடையு‌ம் வரை அவரை துபா‌யி‌ல் த‌ங்க ‌காவ‌ல்துறை‌யின‌‌ர் நி‌ர்ப‌ந்‌தி‌த்தன‌ர். எ‌னினும‌் ‌திருமண நாள‌ன்று கூட கேரளா சென‌்று‌விடலா‌ம் எ‌ன்று நம‌்‌பி‌க்கையுட‌ன் இரு‌ந்தா‌ர் ‌பி‌ரி‌ன்‌‌ஸ்.
இ‌தனா‌‌ல் மணமக‌ன் இ‌ந்‌தியா ‌திரு‌ம்புவ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்ப‌ட்டது. எ‌னினு‌ம், கேரளா‌விலோ பிரின்ஸ்-ரம்யா திருமண ஏற்பாடுகளை இருதர‌ப்பு பெ‌ற்றோ‌ர்களு‌ம் செ‌ய்து வ‌‌ந்தன‌ர். ‌திருமண நாளன்றுகூட பிரின்ஸ் ஊர் திரும்பி விடுவார் என்று பெ‌ற்றோ‌ர்க‌ள் உறு‌தியாக இரு‌ந்தன‌ர்.
ஆனா‌ல், கடை‌சி நேர‌‌த்‌தி‌ல் த‌ன்னா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு வர முடிய‌வி‌ல்லை எ‌ன்று ‌பி‌ரி‌ன்‌ஸ் தனது பெ‌ற்றோரு‌க்கு தெ‌ரி‌வி‌த்தா‌ர். ‌திருமண நா‌ளி‌ல் ‌திருமண‌த்‌‌தி‌ற்கு அழை‌த்‌திரு‌ந்த உற‌வின‌ர்க‌ள் அனைவரு‌ம் வ‌ந்து ‌வி‌ட்ட‌‌நிலை‌யி‌ல் ‌திருமண‌த்தை ‌நிறு‌த்த பெ‌ற்றோ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.
webdunia photo
WD
இதனா‌ல் ‌திருமண‌த்தை ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி நட‌த்த இருதர‌ப்பு பெ‌ற்றோ‌ர்களு‌ம் ஒ‌ப்பு‌க் கொ‌ண்டன‌ர். திட்டமிட்டபடி திருமண விருந்து அளிக்க‌ப்ப‌ட்டு, சடங்குகள் நடத்த‌ப்ப‌ட்டன. அதன்படி ரம்யா மணக் கோலத்துடன் மணமேடை ஏறினார். அவருக்கு மணமகன் சார்பில் அவரது சகோதரி (பெரியம்மா மகள்) தன்யா மாலை அணிவித்து, அவரை தனது இல்லத்தின் மருமகளாக இணை‌த்து‌க் கொ‌ண்டா‌ர். பிரின்சின் பெற்றோர், அட்சதை தூவி ரம்யாவை மருமகளாக ஏற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மணமகன் இல்லத்தின் சமையல் அறையை காணும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு திருமண சடங்குகள் நடைபெற்றன. வந்த விருந்தினர்களுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது.

துபாயில் இருந்து பிரின்ஸ் ஊர் திரும்பியதும், ரம்யாவுக்கு தாலி கட்டும் சடங்கு நடைபெறும் என்று, இருதரப்பு குடும்பத்தினரும் தெரிவி‌த்து‌ள்ளன‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :