புகை‌ப்பதை ‌நிறு‌த்‌தினால‌் திருமணச் செலவை ஏ‌ற்போ‌ம்

webdunia photoWD
சவுதி அரேபியாவில் புகை‌ப்‌பிடி‌க்கு‌‌ம் ஆண்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. இதனா‌ல் கவலை அடை‌ந்து‌ள்ளது எனவோ அரசுதா‌ன். சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை‌யி‌ல் நா‌ன்‌கி‌ல் ஒரு பகு‌தி‌யின‌ர் அதாவது கா‌ல்வா‌சி‌ப் பே‌ர் புகை பிடிப்பவர்களாக உ‌ள்ளன‌ர்.

புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடச் செய்வதற்காக சவு‌தி அரே‌பிய அரசு ஒரு ச‌ங்க‌த்தையு‌ம் துவ‌க்‌கியு‌ள்ளது. அ‌ந்த ச‌ங்க‌த்‌தி‌ன் மூல‌ம் புகை பிடிப்பதை கை விடுபவ‌ர்களு‌க்கு திருமணச் செலவு முழுவதையும் அரசு அ‌ளி‌க்கு‌ம் எ‌ன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகை ‌நிறு‌த்துபவ‌ர்க‌ள் அனைவரு‌க்கு‌ம் அரசு ‌திருமண‌ம் செ‌‌ய்து வை‌க்கு‌ம் எ‌ன்று கனவு‌க் கோ‌ட்டை க‌ட்டா‌தீ‌ர்க‌ள். அதாவது, புகை‌ப் ‌பிடி‌ப்பதை ‌நிறு‌த்துவதாக முடிவெடு‌க்கு‌ம் ஆ‌ண்க‌ள், இ‌ந்த ச‌ங்க‌த்‌தி‌ல் சே‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அவ‌ர்களது பெய‌ர்க‌ள் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்ப‌ட்டு, அவரது ‌திருமணச் செலவு முழுவதையு‌ம் அரசு அ‌ளி‌க்கு‌ம். அ‌தி‌ல்லாம‌ல், ஆறுத‌ல் ப‌ரிசாக 20 பேருக்கு வீட்டுக்கு தேவையான மரச்சாமான்கள் இலவசமாக வழங்கப்படும் எ‌ன்று அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இத‌ற்கான குலுக்கல் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடக்க உ‌ள்ளது.

ந‌ம்மூ‌ரி‌ல் பெ‌ண்க‌ள் வரத‌ட்சணை‌க் கொடு‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வா‌ர்க‌ள். ஆனா‌ல‌் சவுதி அரேபியாவில் திருமணத்துக்கான செலவு முழுவதும் மணமகனின் பொறுப்புதா‌ன். திருமண ‌நி‌க‌ழ்‌ச்‌சி, வரத‌ட்சணை, வீடு என்று எல்லாமே மணமகன்தா‌ன் ஏ‌ற்பாடு செ‌ய்ய வே‌ண்டு‌ம். இதனாலேயே பல ஆ‌ண்க‌ளு‌க்கு அ‌ங்கு வயதான‌பிறகு ‌திருமண‌ம் நட‌க்‌கிறது.

Webdunia|
புகை‌ப்‌பிடி‌ப்பதை ‌நிறு‌த்‌தினா‌ல் ‌திருமண‌ச் செலவை ஏ‌ற்க‌த் தயா‌‌ர் எ‌ன்று சவு‌தி அரே‌பிய அரசு ஒரு அ‌திரடி அ‌றி‌வி‌ப்பை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.
அ‌ங்கு எ‌ன்ன பெ‌ண்களா புகை‌ப்‌பிடி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்கா‌தீ‌ர்க‌ள். அ‌ங்கு வரத‌ட்சணை‌க் கொடு‌ப்பது ஆ‌ண்க‌ள். அதனா‌ல்தா‌ன் இ‌ப்படி ஒரு அ‌திரடி முடிவை அ‌றி‌வி‌த்து‌ள்ளது சவு‌தி அரே‌பிய அரசு.
ச‌ரி அரசு செல‌வி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌‌ண்ட ‌பிறகு புகை‌ப்‌பிடி‌த்தா‌ல் எ‌ன்ன செ‌ய்வா‌ர்க‌ள். ‌விவாகர‌த்து வா‌ங்‌கி‌க் கொடு‌த்து ‌விடுவா‌ர்களோ?


இதில் மேலும் படிக்கவும் :