திருமணமாகாமல் குடும்பம் நடத்தினால்..

WD
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅளித்த தீர்ப்பில், ஒரு பெண், திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினால் மனைவிக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற முடியாது. எனினும், திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினாலும் 4 நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மனைவிக்கான உரிமையை பெற அந்த பெண்ணுக்கு தகுதி உண்டு என தெரிவித்தது.

அந்த நிபந்தனைகள் வருமாறு: 1) அந்த தம்பதியானது, சமூகத்தில் மனமொத்த கணவன்-மனைவி போன்று வாழ்ந்திருக்க வேண்டும். 2) ஆண், பெண் இருவருமே சட்டப்படி திருமண வயதை அடைந்திருக்க வேண்டும். 3) இருவருமே அதுவரை திருமணமாகாமல் இருப்பது உட்பட, சட்ட ரீதியான திருமணத்துக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு இருக்க வேண்டும். 4) சுய விருப்பத்துடன் கணவன்-மனைவியாக அவர்கள் சேர்ந்திருப்பதோடு, உலகின் பார்வையில் மனமொத்த தம்பதியாக குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருக்க வேண்டும்.

இது தவிர, நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில், கணவன்-மனைவி போன்று சேர்ந்து வாழும் அனைவருமே, 2005-ம் ஆண்டு அமலுக்கு வந்த குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் பலன்களை பெற முடியாது. மேற்கண்ட நிபந்தனைகள் ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே, அத்தகைய ஆதாயங்களை அடையலாம். ஒரு மனிதன், ஒரு பெண்ணை தன்னுடைய செக்ஸ் உறவுக்காகவோ அல்லது தனது தனிப்பட்ட வேலைக்காகவோ பணம் கொடுத்து பராமரித்து, பாதுகாத்து (கீப்) வந்தால், அந்த உறவை இயற்கையான திருமணமாக எங்களால் கருத முடியவில்லை.

Webdunia|
திருமண‌மசெ‌ய்தகொ‌ள்ளாம‌லகுடு‌ம்ப‌மநட‌த்து‌மமுறை. த‌ற்போதசமுதாய‌த்‌தி‌‌ற்கபெரு‌மசவாலாக ‌விள‌ங்கு‌‌கிறது. இ‌ந்த ‌விஷய‌த்‌தி‌லஒரஅ‌‌திரடியான ‌தீ‌ர்‌ப்பஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றியு‌ள்ளது.
செக்ஸ் அல்லது உடல் ரீதியான தேவைக்காக மட்டும் குடும்பம் நடத்தும் பெண்ணுக்கு மனைவிக்கான சலுகைகள் பெற உரிமை கிடையாது என உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மதீர்ப்பளித்து‌ள்ளது. . எனினும், விதி விலக்காக 4 நிபந்தனைகளையு‌மவிதித்து‌ள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலு‌ச்சாமி என்பவரை எதிர்த்து பேச்சியம்மாள் என்ற பெண் குடும்பநல ‌நீ‌திமன‌ற்‌த்‌தி‌லவழக்கு தொடர்ந்தார். தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு பிரிந்து சென்று விட்டதால் தனக்கு வேலுசாமி ஜீவனாம்சம் தர வேண்டும் என மனுவில் தெரிவித்தார். அதை விசாரித்த குடும்ப நல ‌நீ‌திம‌‌ன்ற‌‌‌மரூ.500 அளிக்குமாறு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்றமு‌மஉறுதி செய்தது.எனவே, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவேலுசாமி மேல்முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், எனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். பேச்சியம்மாளுடன் சில காலம் சேர்ந்து வாழ்ந்தாலும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற அவருக்கு உரிமை கிடையாது என தெரிவித்தார்.இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் அடங்கிய உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், பேச்சியம்மாளுக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌மமற்றும் கீழ் ‌நீ‌திம‌ன்ற‌மபிறப்பித்த உத்தரவுகளை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மநேற்று தள்ளுபடி செய்தது.


இதில் மேலும் படிக்கவும் :