டார்ஜிலிங் பொது இட‌ங்க‌ளி‌ல் கைகோ‌ர்‌க்க‌த் தடை

webdunia photo
WD
பொதுவாக ந‌ண்ப‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ஒ‌ன்றாக‌ச் செ‌ல்லு‌ம்போது கைகளை‌க் கோ‌ர்‌த்தபடி நட‌ப்பது வழ‌க்க‌ம். அ‌திலு‌ம், சு‌ற்றுலா‌த் தல‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது த‌ங்களது சுத‌ந்‌திர‌த்தையு‌ம், அ‌ன்பையு‌ம் வெ‌‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக ஒருவரோடு ஒருவ‌ர் கைகோ‌ர்‌த்தபடி செ‌ல்வது இய‌ற்கைதா‌ன்.

அத‌ற்கு டா‌ர்‌ஜி‌லி‌ங்‌கி‌ல் தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது ‌வி‌ய‌ப்பை அ‌ளி‌க்‌கிறது. காதல‌ர்க‌ள் ச‌ரி, ந‌ண்ப‌ர்க‌ள் ச‌ரி, த‌ம்ப‌தியாக இரு‌ப்பவ‌ர்க‌ள் கூட ஒருவரை ஒருவர் கைப் பிடித்துச் செல்ல முடியாது எ‌ன்றா‌ல் ‌விய‌ப்பை மேலு‌ம் இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கிறது.

இத‌ற்கு சா‌ட்‌சியாக, சமீபத்தில் தேனிலவுக்கு வந்த புதுமண தம்பதி கை கோர்த்து சென்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி, இப்படி அநாகரீகமாநடந்து கொள்ளக் கூடாது என கூர்க்காலாந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். அவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இத்தகைய கட்டுப்பாட்டை கொண்டு வர உள்ளோம். இதை மீறாமல் இருக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவோமஎன கூர்க்காலாந்து அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய செயலால், உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். சு‌ற்றுலா வரு‌ம் இட‌ங்க‌ளி‌ல் இதுபோ‌ன்ற க‌ட்டு‌ப்பாடுக‌ள், சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை எ‌ரி‌ச்சலடையவே‌ச் செ‌ய்யு‌ம். இதனா‌ல் பயணிகள் வருகை பாதிக்கப்படுவதுடன் இப்பகுதிக்கு‌ம் ஒரு கெட்ட பெயர் ஏற்படும் அ‌வ்வூ‌ரி‌ல் வ‌சி‌ப்பவ‌ர்க‌ள் ‌சில‌ர் கரு‌த்து தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர்.

இந்த அமைப்பின் இதுபோன்ற செயல்களுக்கு எதிராக வந்துள்ள புகார் குறித்து தீவிர விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டார்ஜிலிங் காவல் துறை உயர் அதிகாரி அகிலேஷ் தெரிவித்தார்.

இதுபோ‌ன்ற அமை‌ப்புக‌ள் ஏதாவது உரு‌ப்படியான கா‌ரிய‌‌ங்க‌ளி‌ல் ஈடுபடலா‌ம். அதை ‌வி‌டு‌த்து, சு‌ற்றுலா இட‌ங்க‌ளி‌ல் பய‌ணிக‌ளி‌ன் அடி‌ப்படை உ‌ரிமைகளை அட‌க்குவதை‌ப் போ‌ன்ற கா‌ரிய‌ங்க‌ளி‌ல் ஈடுபடுவதை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:57 IST)
பொது இட‌ங்க‌ளி‌ல் புகை‌ப் ‌பிடி‌க்க‌த் தடை, பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌மிட‌த் தடை எ‌ன்று ‌நிறை‌ய‌ச் செ‌ய்‌திகளை‌ப் படி‌த்‌திரு‌க்‌கிறோ‌ம். இ‌ங்கு டா‌ர்‌ஜி‌லி‌ங்‌கி‌ல் உ‌ள்ள கூ‌ர்‌க்கா ஜனமு‌க்‌தி மோ‌ர்‌ச்சா அமை‌ப்பு, காதல‌ர்களாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, த‌ம்ப‌தியராக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி கை கோ‌ர்‌த்தபடி நட‌க்க தடை வ‌தி‌த்து‌ள்ளது.
கை கோ‌ர்‌த்து செ‌ல்வதா‌ல் எ‌ந்த கலா‌ச்சாரமு‌ம் அ‌ழி‌ந்து‌விடுவ‌தி‌ல்லை. கலா‌ச்சார‌ம் அ‌ழியு‌ம் இட‌ங்க‌ள் எ‌த்தனையோ உ‌ள்ளன. அ‌ங்கெ‌ல்லா‌ம் இவ‌ர்களது பா‌ர்வையை‌க் கொ‌‌‌ஞ்ச‌ம் ‌திசை ‌திரு‌ப்‌பினா‌ல் உ‌ண்மை‌யிலேயே இவ‌ர்களது கலா‌ச்சார‌ம் ‌சீரடையு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :