ஜூலியட் பால்கனி வாடகை‌க்கு ‌கிடை‌க்கு‌ம்

Webdunia|
காத‌ல் வரலா‌ற்‌றி‌ல் ‌நீ‌ங்கா இட‌ம் ‌பிடி‌த்த ரோ‌மியோ - ஜூ‌லிய‌ட் ஜோடிக‌ள் காதலை ப‌ரிமா‌றி‌க் கொ‌ண்ட பா‌ல்க‌னி த‌ற்போது ‌திருமண‌த்‌தி‌ற்காகவு‌ம், காத‌ல் ஜோடிகளு‌க்கு‌ம் வாடகை‌க்கு ‌விட‌ப்படு‌கிறது.

வெரோனாவில் உள்ள அந்த பால்கனியில்தான் உலகப் புகழ் காதல் ஜோடியான ரோமியோ - ஜூலியட் தங்கள் முதல் காதலை வெளிப்படுத்தினராம். அதன்மூலம் இன்று வரை சரித்திரத்தில் காதலுக்கு அர்த்தமாகிப் போன அவர்கள் பயன்படுத்திய பால்கனியை இப்போது திருமணங்கள் நடத்த வாடகைக்கு அளிக்க ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் வாடகை‌த் தொகையை‌க் கே‌ட்கவே மலை‌ப்பாக உ‌ள்ளது.
உள்ளூர்காரர்களுக்கு வாடகையில் சலுகை உண்டு. அவர்கள் ஒரு நாளுக்கு ரூ.39,800 கொடு‌த்தா‌ல் போதும். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஜோடிகளுக்கு வாடகை ரூ.52,800. உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த காதல் ஜோடிகளுக்கு வாடகை ரூ.66,000 (கொஞ்சம் அதிகம்தான்...)

சு‌‌ற்றுலா‌ப் பய‌ணிகளை கவ‌ர்வத‌ற்காக இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை வகு‌த்து‌ள்ளா‌ர்களா‌ம். இதன்மூலம் இத்தாலியின் சுற்றுலா அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோமஎன்கிறார் நகர சுற்றுலாத் துறை தலைவ‌ர் டேனியல் படாலோ.


இதில் மேலும் படிக்கவும் :