குடியை‌க் கெடு‌க்கு‌ம்‌ குடி

WD
கூ‌லி வேலை செ‌ய்பவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, எ‌த்தனையோ பெ‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய பத‌விக‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் நப‌ர்க‌ள் கூட, த‌ங்களது ச‌ம்பா‌த்‌திய‌த்தை முழுவது‌ம் டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌லேயே செலவ‌ழி‌த்து‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு போவதை பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்.

வீ‌ட்டி‌ற்கு வருமானமு‌ம் இ‌ல்லாம‌ல், குடி‌த்து ‌வி‌ட்டு வ‌ந்து மனை‌வியையு‌ம், குழ‌ந்தைகளையு‌ம் அடி‌த்து கொடுமை‌ப்படு‌த்து‌ம் கணவ‌னை எ‌த்தனையோ மனை‌விக‌ள் க‌ல்லானாலு‌ம் கணவ‌ன், பு‌ல்லானாலு‌ம் புருஷ‌ன் எ‌ன்று எ‌ண்‌ணி வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், ஒரு கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் இதனை‌த் தா‌ங்க முடியாம‌ல் கணவ‌ன் எ‌‌ன்ற ப‌ந்த‌த்தை உத‌‌ரி ‌வி‌ட்டு செ‌ல்பவ‌‌ர்களு‌ம் உ‌ண்டு. ஆனா‌ல் ‌சில‌ர், ச‌ந்த‌ர்‌ப்ப சூ‌ழ்‌‌நிலையா‌ல் கணவனை கொலை செ‌ய்யு‌ம் அள‌வி‌ற்கு‌ம் செ‌ல்‌கி‌ன்றன‌ர்.

ஒரு நாளை‌க்கு த‌மி‌ழ் நா‌ளித‌ழ் ஒ‌ன்‌றிலாவது, குடு‌ம்ப‌த் தகராறு, கணவனை‌க் கொ‌ன்ற மனை‌வி எ‌ன்ற செ‌ய்‌தி இ‌ட‌ம்பெ‌ற்று ‌விடு‌கிறது. க‌ட்டிய‌க் கணவனையே‌ மனை‌வி கொ‌ல்லு‌ம் அள‌வி‌ற்கு கொ‌ண்டு செ‌ல்வது எது? கணவனை‌க் கொலை செ‌ய்த மனை‌வி ‌சிறை‌க்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ‌பிறகு ‌பி‌ள்ளைக‌ளி‌ன் க‌தி எ‌ன்ன? அ‌ந்த குடு‌ம்ப‌ம் எ‌ன்ற வா‌ர்‌த்தை ‌சிதைவது எதனா‌ல்? சாதாரண ஒரு இ‌ல்ல‌த்தர‌சியை கொலை‌க்கா‌ரியா‌க்‌குவது எது? இ‌ப்படி ப‌ல்வேறு கே‌ள்‌விகளு‌க்கு ஒரே ப‌தி‌ல் இரு‌க்க முடியுமானா‌ல் அது இ‌ந்த குடி‌ப்பழ‌க்க‌ம்தா‌ன்.

குடி‌ப்பழ‌க்க‌த்தா‌ல் குடு‌ம்ப‌த்தை இழ‌ந்தவ‌ர்க‌ள் பல‌ர், வா‌ழ்‌க்கையை தொலை‌த்தவ‌ர்க‌ள் பல‌ர், கு‌ற்றவா‌ளிகளானவ‌ர்க‌ள் பல‌ர், உ‌ற்றவரை கு‌‌ற்றவா‌ளியா‌க்‌கியவ‌ர்களு‌ம், உ‌யிரையே இழ‌ந்தவ‌ர்களு‌ம் பல‌ர் உ‌ள்ளன‌ர். இ‌ப்படி‌யிரு‌க்கு, அ‌ந்த குடியா‌ல் அடையு‌ம் ந‌‌ன்மைதா‌ன் எ‌ன்ன?

சாலை‌யி‌ல் நட‌க்கு‌ம் பல வாகன ‌விப‌த்துகளு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌க் காரணமாக குடிய‌ல்லவா இரு‌க்‌கிறது. வாகன‌த்‌திலு‌ம் ச‌ரி, வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் ச‌ரி ‌விப‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் இ‌ந்த குடி எ‌ன்ற அர‌க்கனை ந‌ம் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வராம‌ல் தடு‌க்க வே‌ண்டாமா? சமுதாய‌த்தையே ‌சீர‌ழி‌க்கு‌ம் குடியா‌ல் ‌உ‌ங்க‌ள் குடி கெட வே‌ண்டுமா?

Webdunia|
குடி‌ப்பத‌ற்கு மு‌ன் எ‌வ்வளவு ந‌ல்லவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்களோ, போதை தலை‌க்கே‌றியது‌ம் அ‌வ்வளவு‌க்கு அ‌வ்வளவு ‌தீய செய‌ல்க‌ளி‌ல் எ‌ந்த ‌தய‌க்கமு‌ம் இ‌ல்லாம‌ல் இற‌‌ங்கு‌கிறா‌ர்க‌ள். குடி‌ப்பதாலேயே பலரு‌க்கு‌ம் தவறு செ‌ய்ய அனை‌த்து உ‌ரிமையு‌ம் இரு‌ப்பதாக ‌நினை‌த்து மனை‌வியை அடி‌ப்பது, குழ‌ந்தைகளை அடி‌ப்பது, தெரு‌வி‌ல் போவோ‌ர் வருவோ‌ரிட‌ம் ச‌ண்டை போடுவது என பலவாறான ‌தீய செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்க‌ள்.
ஒரு ந‌ல்ல குடு‌ம்ப‌ம், குடு‌ம்ப‌த் தலைவ‌னி‌ன் குடி‌ப்பழ‌க்க‌த்தாலேயே கெ‌ட்டு ‌சீர‌ி‌‌ழி‌ந்து போனதை ந‌ம்‌மி‌ல் பலரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம். இ‌ன்னு‌ம் எ‌த்தனையோ குடு‌‌ம்ப‌ங்க‌ள் ‌சீ‌ர‌ழி‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதையு‌ம் க‌ண்கூடாக பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்போ‌ம்.
குடி‌ப்பதை மற‌ப்போ‌ம், குடு‌ம்ப‌த்தை ‌நினை‌ப்போ‌ம்


இதில் மேலும் படிக்கவும் :