காதலிக்கும் முன் கேட்க வேண்டிய கேள்விகள்

webdunia photoWD
ஒரு பெண்ணிடம் பேசலாம் என ஒரு ஆணுக்கு தைரியம் வரும் சூழலில் கீழ்க்கண்ட கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக் கொள்வது அவனுக்கும், அவளது காதலுக்கும் மிகச் சிறந்ததாகும்.

முதல் கேள்வி, அவளுக்கு நான் சரியான நபர்தானா?

என்னால் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமா?

எனக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறதா?

நான் அவளை விரும்புவது சரிதானா?

அவள் என்னால் சந்தோஷமடைவாளா?

என் சந்தோஷம் அவளிடம்தான் இருக்கிறதா?

அவளுக்காக நான் மற்றவர்களை இழக்கும் அளவிற்கு தைரியம் உடையவனா?

அவள்தான் என் வாழ்க்கை என்று முழுமையாக நம்புகிறேனா?

போன்ற கேள்விகளை ஒன்றுக்கு இரு முறை தனக்குள்ளே கேட்டுப் பார்த்து அதற்கு சரியான பதில்களைக் கூற வேண்டும்.

நீங்கள் காதலிப்பது அவளை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இருக்க வேண்டுமேத் தவிர, ஊர் சுற்றிவிட்டு, சலித்ததும் பிரிந்து விடுவதற்காக இருக்கவேக் கூடாது. இவை அனைத்துக்கும் சரி என்ற பதில் வந்தால் மட்டுமே அந்த பெண்ணிடம் உங்கள் காதலை தெரிவிக்க வேண்டும்.

அதிகபட்சமான கேள்விகளுக்கு இல்லை என்ற பதில் வந்தால் உடனடியான அவளது கண்ணில் படாமல் ஓடிவிடுங்கள்.

ஆணைப் போலவே பெண்ணுக்கும் சில விஷயங்கள் உள்ளன. இதுவரை தூரமாய் இருந்து பார்த்து வந்த ஒருவன் அருகே வந்து பேசுகிறான் எனும் பொழுது அவளும் காதலின் அடுத்த கட்டத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

பெண் தனது பதிலை சொல்லும் முன் தனக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

webdunia photoWD
பதில் சொல்ல வேண்டுமா? அல்லது தட்டிக்கழிக்க வேண்டுமா என முடிவெடுக்கும் முன்னர் அடுத்து வரும் கேள்விகளை மனதிற்குள் கேட்டுப் பார்த்துவிடுவது நல்லது.

நான் செய்வது சரிதானா?

எனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் அளவிற்கு எனக்கு தகுதியும், வயதும் உள்ளதா?

இதைத் தவிர்ப்பது நல்லதா? தேர்ந்தெடுப்பது சிறந்ததா?

இவன் உண்மையில் நல்லவனாகவும், உண்மையில் காதலிப்பவனாகவும் மனதுக்கு தெரிகிறதா?

என்னுடைய நடத்தைகள் ஏதாவது அவனது கவனத்தை சிதறடித்துவிட்டதா?

என் மனதில் இருக்கும் அந்த உருவத்துடன் இவன் ஒத்து வருவானா?

இவன் இல்லை என்றால் நம்முடைய வாழ்வில் சந்தோஷம் இருக்காது என்று நம்புகிறாயா?

இவனுக்காக நாளை ஒரு பிரச்சினை என்றால் உறவினர்களுடன் போராடவும், அவர்களை விட்டு விலகி வரவும் முடியுமா?

மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிரண்டிற்காவது தவறான பதில்கள் கிடைக்கும் பட்சத்தில் காதலில் அடுத்த கட்டத்திற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.

முடிந்தால் அவரிடம் உங்களது நிலையை தெளிவாக விளக்கிவிட்டு விலகிக் கொள்வது இருவருக்கும் சிறந்தது.

ஆண்கள் என்பவர்கள் ஒரு ரப்பர் வளையம் போன்றவர்கள். பெண்களுக்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் இழுபடுவார்கள். ஆனால் பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் மீண்டும் பழைய நிலைமைக்கே போய்விடவும் அவர்களால் முடியும்.

எனவே ஆணின் மனம் புண்பட்டுவிடும் என்று எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை. உண்மையில் உங்கள் மனதுக்கு பிடித்து, உங்களால் கடைசி வரை போராடி கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டால் மட்டும் உங்களது பதிலை ஆம் என்று அழுத்தம் திருத்தமாக கூறுங்கள்.

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:40 IST)
காதலிப்பதை நீங்கள் உணர்ந்து, நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை சொல்லும் முன் உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன.
அவற்றை நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு மட்டுமே கேட்க வேண்டும். அதற்குப் பிறகு இந்த கேள்விகளைக் கேட்டால் அது உங்கள் காதலையே கேள்விக்குறியாக்கிவிடும்.முதலில் ஆண்களிடம் வருவோம். அதாவது ஒரு பெண்ணைப் பார்த்து அவளை பிடித்துவிட்டது. அவளையும் நம்மைக் கவனிக்க வைத்தாகிவிட்டது. அப்புறம் என்ன அவளிடம் சென்று பேசுவதுதான், தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதுதான்.


இதில் மேலும் படிக்கவும் :