இலங்கை அகதி ஜோடி‌க்கு நிச்சயதார்த்தம்

Webdunia| Last Modified வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (11:52 IST)
இல‌ங்கை‌யி‌ல் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌திராக நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌லினா‌‌ல், அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி இ‌ந்‌‌தியா வ‌ந்த இல‌ங்கை அ‌க‌திக‌ள் ஜோடி‌க்கு நே‌ற்று ‌திருமண ‌நி‌ச்சயதா‌ர்‌த்த‌ம் ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்றது.

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த உமாரமணன் என்பவர் த‌ங்க வைக்கப்பட்டுள்ளார். இவருக்கும் மதுரை திருநகரில் அகதிகள் முகாமில் இருக்கும் கற்பூரநாயகிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்ய‌ப்ப‌ட்டது.

இதற்கு அனுமதி கேட்டு உமாரமணன் அரசுக்கு கடிதம் எழுதினார். இதனை அதிகாரிகள் பரிசீலித்து திருமணத்திற்கு அனுமதி வழங்கினர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை செங்கல்பட்டில் உள்ள ஒசூரம்மன் கோவிலில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது உமாரமணன், கற்பூரநாயகி இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி மோதிரம் அணிவித்தனர்.

அகதிகள் முகாமில் இருப்பவர்கள் என்பதால் துப்பாக்கி ஏந்திய பலத்த கா‌வ‌ல்துறை பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
உமாரமணன்-கற்பூரநாயகி இணை‌யி‌ன் திருமணம் வருகிற 30-ந் தேதி நடைபெற உ‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :