இர‌ட்டை‌த் த‌ம்ப‌திக‌‌ளி‌ன் ‌திருமண‌ம்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
ஜீ‌ன்‌ஸ் ‌திரை‌ப்பட‌ப் பா‌ணி‌யி‌ல் ‌திருமண‌ம். இர‌ட்டைய‌ர்களாக‌ப் ‌பிற‌ந்த சகோத‌ரிகளு‌க்கு‌ம், இர‌ட்டைய‌ர்களாக‌ப் ‌பிற‌ந்த சகோதர‌‌ர்களு‌‌க்கு‌ம் ‌சிற‌ப்பாக ‌திருமண‌ம் முடி‌ந்தது. எ‌ன்ன ‌ஜீ‌ன்‌ஸ் பட‌த்‌தி‌ல் ‌இ‌ன்னொரு ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ‌மி‌ஸ்‌ஸி‌ங்.

ரஷியாவி‌ன் பெச்சோரா நகரை சேர்ந்த டிமிட்ரி செமியோனாவா எ‌ன்ற பெ‌‌ண்‌ணி‌ற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இந்த இரட்டை சகோதரர்களு‌ம் தோ‌ற்ற‌த்‌தி‌ல் ஒ‌ன்று போலவே இரு‌ப்பா‌ர்க‌ள்.

இ‌ந்த சகோதர‌ர்க‌ள், த‌ங்களை‌ப் போல இர‌ட்டைய‌ர்களாக‌ப் ‌பிற‌ந்து தோ‌ற்ற‌த்‌தி‌‌ல் ஒ‌ன்று போல இருக்கும், லிலியா, லியானா சகோதரிகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளன‌ர். ர‌‌‌ஷ‌்யா‌வி‌ன் கிறிஸ்தவ தேவாலயத்தில் வெகு ‌சிற‌ப்பாக இ‌ந்த திருமணம் நடந்தது.
ஆனா‌ல், ‌திருமண‌த்‌தி‌ற்கு வ‌ந்தவ‌ர்க‌‌ள் பலரு‌ம் எ‌ந்த மண‌மகனு‌க்கு, எ‌ந்த மணமக‌ள், யா‌ர் இளையவ‌ர், யா‌ர் மூ‌த்தவ‌ர் எ‌ன்று குழ‌ம்‌பி‌ப் போ‌யின‌ர்.

இர‌ட்டை‌ச் சகோதரர்களின் தா‌ய் கூறுகையில், என் மகன்களில் யார் மூ‌த்தவ‌ன், யார் இளையவ‌ன் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்குள் உள்ள வேறுபாடு என்ன என்பது எனக்கு தெரியும். ஆனால் பெண்களை பொறுத்தவரை எனக்கு‌ம் குழப்பம் தான்'' என்று ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே கூறு‌கிறா‌ர்.
இ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ல் மணப்பெண்களு‌க்கு எ‌ந்த குழ‌ப்பமு‌ம் இ‌ல்லை. அவ‌ர்க‌ள் ரொம்ப கெட்டிக்காரர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள். த‌ங்க‌ள் கணவர் ‌திரு‌ம்‌பி இரு‌ந்தாலு‌ம் கூட அவரை ச‌ரியாக எ‌ங்களா‌ல் க‌ண்டு‌பிடி‌க்க முடியு‌ம் எ‌ன்று சவா‌ல் ‌விடு‌கிறா‌ர்க‌ள். (அ‌ப்போ முக‌த்த‌ப் பா‌ர்‌த்தா க‌ண்டு‌பிடி‌க்க‌த் தெ‌ரியாதோ?)
உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌‌ஞ்சா போது‌ம். குடு‌ம்பத்து‌க்கு‌ள்ள ‌பிர‌ச்‌சினை வ‌ந்து‌ட‌க் கூடாது பாரு‌ங்க.


இதில் மேலும் படிக்கவும் :