ஆகாயத்‌தி‌ல் ‌ப‌ற‌ந்தபடி டு‌ம் டு‌ம்

Webdunia| Last Modified சனி, 28 பிப்ரவரி 2009 (11:56 IST)
பொதுவாக ஒ‌வ்வொருவரு‌ம் த‌ங்களது ‌திருமண‌ம் வெகு ‌சிற‌ப்பாக நட‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்புவா‌ர். ஆனா‌ல் இ‌ங்கே ஒருவ‌ர் தனது ‌‌திருமண‌‌த்தை வெகு ‌வி‌த்‌தியாசமாக நட‌த்‌தியு‌ள்ளா‌ர்.

அதாவது ஒரு இள‌ம் ஜோடி த‌ங்களது ‌திருமண‌த்தை ராட்சத பலூனில் பற‌ந்தபடியே நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

தரையிலிருந்து 100 மீட்டர் உயரத்தில் நடைபெற்ற இந்த ஆகாயத் திருமணத் திற்கு உறவினர்களும், நண்பர்களும் தரையிலிருந்து வாழ்த்துத் தெரிவித்தனர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த பலூன் திருமணத்துக்கு ஆன செலவு ரூ. 80 ஆயிரமாகும்.

தனியார் வங்கியில் பணிபுரியும் தேவ் பிரசாந்த் திரிவேதி - அர்ச்னா ஜோடிக‌ள்தா‌ன் ஆகாய‌த்‌தி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌‌ண்டு த‌ம்‌ப‌திக‌ள் ஆ‌கியு‌ள்ளன‌ர்.
20 நிமிஷம் நடைபெற்ற இத்திருமண சடங்குகளை தரையிலிருந்த உறவினர்க ளும், நண்பர்களும் பார்ப்பதற்கு வசதியாக பிரம்மாண்ட திரைகள் அமைக்கப் பட்டிருந்தன.

பலூனை இயக்கும் பைலட், புதுமணத் தம்பதியினர், புரோகிதர் மற்றும் ஒ‌‌ளி‌ப்ப‌திவாள‌ர் மட்டுமே பலூனில் பறந்தனர்.
எனது திருமணம் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறையைத் தேர்ந்தெடுத்தேன்
இதற்கு எனது பெற்றோரும், நண்பர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்த னர். இதற்கு அர்ச்சனாவின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர் என்று திரிவேதி ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன் தெரிவித்தார்.
நடுவானில் இத்திருமணத்தை நடத்துவதற்கு விமான இயக்குநரிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டதாக தெரிவித்தனர் பலூனில் பறந்தபடி திருமணம் புரிந்த புதுமணத் தம்பதியினர்.


இதில் மேலும் படிக்கவும் :