அவள் எனக்கு என்ன உறவு?

சிரவணன்

Webdunia|
சட்டென இயல்புக்கு திரும்பியவனாய், "சரிங்க நாங்க அப்ப அவங்கள அங்கேயே போய் பாத்துக்குறோம். கிளம்புறோம். ரொம்ப தேங்க்ஸுங்க." நழுவினான் சிவா.

திருச்சி பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.

"என்னடா எமோஷனாயிட்டியா? சாரிடா நான் உன் மேட்டரை சீரியஸாவே எடுத்துக்கல. ஆனா, அந்த ஆளப் பாத்து 'ஸ்ரீனிவாசன்'னு கூப்பிட்டதும் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்."
"அவரு, அப்ப என்னோட ஸ்கூல் மேட்டுடா." ஜன்னல் பக்கம் சாய்ந்த சிவாவின் மனம் ஏதேதோ யோசித்தது.

காதல்... ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்தவன். எழுத்தை காதலித்த அளவுகூட காதலிக்கப்படாத காதலி, தனது காதலுக்காக வாழ்க்கையை இழந்துவிட்டிருக்கிறாள். 'உன்னை தவிர வேற எதுவும் வேண்டாம் கோவிந்து' என்ற சொன்ன அன்றைய வார்த்தையை தவறவிடாதவள். அவள் என் மீது செலுத்திக் கொண்டிருக்கும் அன்புக்கு, நான் என்ன விலை கொடுப்பது? மரகத்தை ஏற்றுக்கொள்வதற்கு நான் இப்போது சாரதிப் பித்தனாக இல்லை. அவளை விட இருபத்து ஐந்து வயது சிவா. அவளோ ஐம்பது வயது பெண்.
இத்தனை யோசனைக்கும் மேலாக, தனக்கு அவள் இப்போதைக்கு என்ன உறவு? என்ற கேள்வியே மேலோங்கியிருந்தது.


திருச்சி மலைக்கோட்டை.

பதினேழு படிக்கட்டுகள் கூட ஏறவில்லை. மரகத்தை சிவா பார்த்துவிட்டான்.
"ராஜா... அவங்கதாண்டா." இருபது படிக்கட்டுகளுக்கு மேலே அமர்ந்திருந்த வயதான பெண்ணைப் பார்த்தபடி கூறினான்.

அருகில் நெருங்கினார்கள்.

சிவாவுக்கு வியர்த்தது. உடல் நடுங்குவது போல் இருந்தது. குரல் எழவில்லை. கசங்கிய காட்டன் சேலையைக் கட்டியிருந்த மரகதத்தின் கண்களை பார்த்தபடி எதிரே நின்றான்.
மரகதத்திடம் ராஜாராம் பேச்சு கொடுத்தான்.

அவன் ஏதேதோ கேட்டான். மரகதம் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தாள். சிவாவுக்கு ஏதும் காதில் விழவில்லை.

வறுமையில் வாடிய முகத்தைப் பார்த்தான். சாரதிப் பித்தனிடம் உதிர்க்கப்பட்ட புன்னகை முழுவதுமாக இறந்துவிட்டிருந்தது. ஆனால், அந்தக் கண்களில் மட்டும் வசீகரம் குறையவில்லை. கண்கொட்டாமல் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். உடல் நடுக்கம் குறையத் தொடங்கின. நிதானம் வந்தது. சில நொடிகள், தன்னில் மீண்டும் குடிவந்த சாரதிப் பித்தனின் ஆன்மா நீங்கிவிட்டதுபோல் உடல் இலகுவானது.
"நாங்க பண்ற ஆராய்ச்சியில கவிஞர் சாரதிப் பித்தன்..." மரகதத்திடம் உளறிக்கொண்டிருந்தான், ராஜாராமன்.

"அம்மா..." அழைத்தான், சிவா.

நிமிர்ந்தாள், மரகதம்.


இதில் மேலும் படிக்கவும் :