புகை‌ப்பட‌த்‌தி‌ற்காக ‌மீ‌ண்டு‌ம் ‌திருமணமா?

lovers
webdunia photo
WD
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மார்க். இவரது காதலி சில்வியா டே. இவர்கள் மேற்கு யார்க்ஷைர் மாநிலம் வேக்பீல்டு நகரில் வசித்து வருகிறார்கள். சமீபத்தில் இ‌ந்த ஜோடி வெகு ‌விம‌ரிசையாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை போட்டோ எடுக்கவும், வீடியோ படம் எடுக்கவும் ஒரு புகை‌ப்பட ‌நிபுணரை நியமித்து இருந்தனர்.

திருமணம் முடிந்து போட்டோவை பார்த்தால் ‌த‌ம்ப‌திகளு‌க்கு ஒரே அ‌தி‌ர்‌ச்‌சி. எ‌ந்த புகை‌ப்பட‌த்‌திலு‌ம் த‌ம்ப‌திக‌ளி‌ன் தலையையே‌க் காணவில்லை. இதனா‌ல் ‌மிகவு‌ம் கடு‌ப்பானா‌ர்க‌ள் பு‌‌திய ‌திருமண ஜோடி‌யின‌ர்.

ந‌‌ம்மூ‌ர் ஆ‌ட்களாக இரு‌ந்தா‌ல் புகை‌ப்பட‌த்‌தி‌ற்காக கொடு‌த்த காசை ‌திரு‌ப்பு‌க் கொடுடா எ‌ன்று ச‌ண்டை போ‌ட்டிரு‌ப்போ‌ம். ஆனா‌ல் இவ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் மீண்டும் புகைப்படங்களை எடுத்துக் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

வெறுமனே போ‌ட்டோ எடு‌த்து‌க் கொ‌ள்வது எ‌ப்போ வே‌ண்டுமானாலு‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌திருமண போ‌ட்டோ ‌கிடை‌க்குமா எ‌ன்று ‌சி‌ந்‌தி‌த்த அ‌ந்த த‌ம்‌ப‌திக‌ள் ‌மீ‌‌ண்டு‌ம் ஒரு ‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சியை நட‌த்‌தி, அ‌தி‌ல் ‌திருமண‌ம் செ‌‌ய்து கொ‌ண்டு அதனை புகை‌ப்பட‌ம் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டன‌ர்.

Webdunia|
தா‌லி தோஷ‌ம், அதனா‌ல் இர‌ண்டு தா‌லி க‌ட்டுவது, இர‌ண்டாவது ‌திருமண‌ம் எ‌ன்றெ‌ல்லா‌ம் கே‌ள்‌வி‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறோ‌ம்... ஆனா‌ல் இ‌ங்கே ஒரு ஜோடி புகை‌ப்பட‌த்‌தி‌ற்காக ‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளா‌ர்க‌ள்.
அதே புகை‌ப்பட‌க்காரரா புகை‌ப்பட‌ம் எடு‌த்தா‌ர்?


இதில் மேலும் படிக்கவும் :