இளமைத் துள்ளலுடன் ஜோக்ஸ்

Webdunia|
கொஞ்சம் லொள்ளு, கொஞ்சம் கடி, கொஞ்சம் கலாய்ந்து எடுத்த ஜோக்ஸசில அவ்வப்பொழுது தூவப்படும்... இப்போதைக்கு சில...

தத்துவம்
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருந்தாலும் பாஸ்ட் புட்க்கு போனா நின்று தான் சாப்பிடணும்.
------------------------------------------------------------------------

தோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்
ராதா: நேத்து உன் லவ்வரை பார்க்க க்ஷநநஉh-க்கு போறதா சொன்னியே! என்ன ஆச்சு?
கீதா: அட! அத ஏண்டி கேக்குறா? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!

ராதா: ஏன்! என்ன ஆச்சு?

கீதா: கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக படகு மேல ஏறி நிற்க சொல்லிட்டாருடி!
ராதா: ஹா! ஹா! ஹா!
------------------------------------------------------------------------

முத்தம்
கணவன்: டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் தரலாம்-னு நினைக்கிறேன். என்ன டிம தானே?

மனைவி: எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள் காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம், மளிகை கடைகாரனுக்கு 150 முத்தம். அவுஸஓனருக்கு 250 முத்தம் கொடுத்துடுறேன் என்ன? ஓ.கே. தானே?
கணவன்: ???
------------------------------------------------------------------------

தொலைக்காட்சி விளம்பரம்
வரும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு...உங்கள் அபிமான தொலைக்காட்சியில்...அற்புதமான ஹாலிவுட் திரைப்படம்... தமிழில

சிலந்தி அண்ணாச்சி (Spiderman)
உங்களின் விடுமுறை நாளை குதூகலமாக கொண்டாட ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்க

சூப்பர்ஹிட் ஹாலிவுட் திரைப்படம

"அம்மாச்சி திரும்ப வந்தாச்சு" (Mummy Returns)

முற்றிலும் தமிழில்...
காணத்தவறாதீர்கள்!!!
------------------------------------------------------------------------

வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம்
பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங்
பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன?

விருந்தினர்: ???
------------------------------------------------------------------------
எதிர்பதம்
Subramaniyan "Saw"my-யின் எதிர்பதம் என்ன?

Subramaniyan "did not" see me
------------------------------------------------------------------------

"இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவாயில்லீங்க" "எப்படி சொல்ற?"

"பாருங்க! குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?"

"நாசமா போச்சு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ"
------------------------------------------------------------------------

காதலன் : "டியர் என்ன இவ்வளவு வருஷமா காதலிச்சுட்டு கல்யாணம் செஞ்சுக்க மறுக்கிறியே, ஏன் உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா?" காதலி : "ஆமாம் டியர், எனக்குன்னு ஒருத்தர் பொறக்காமலா இருப்பாங்க?"

காதலி : "ஏன் டியர் நீங்க என்ன மட்டும்தான் லவ் பண்றீங்களா?"
காதலன் : "நிச்சயமா நீதான், ஏன்னா நேத்திக்குதான் லிஸ்ட்ட செக் பண்ணினேன்"
------------------------------------------------------------------------
மனைவி : "உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ' சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்"

கணவன் : "பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்தேன்" ------------------------------------------------------------------------

ஆண் : "ஐ லவ் யூ டியர், உனக்காக என் உயிரக்கூட தயாராக இருக்கேன்"
பெண் : எப்ப? எப்ப? ? ? ?....
------------------------------------------------------------------------

டேட்டிங்போது பேச்சை இப்படி ஆரம்பிக்கலாமே. . . பையன் : "உனக்கு கீரைப் பிடிக்குமா?"

பெண் : "ஊஹும். . ."

பையன் : உனக்கு அண்ணன், தம்பி யாராவது இருக்காங்களா?

பெண் : ஊஹும். . .

பையன் : "சப்போஸ், உனக்கு அண்ணன், தம்பி யாராவது இருந்தா அவங்களுக்கு கீரை பிடிக்குமா?"
பெண் : ?!?!?!
------------------------------------------------------------------------

பெண் : "நான் நல்லாயிருக்கேன்னு பீட்டர் சொல்றான், ஆனா கோரமா இருக்கேன்னு ஜோசப் சொல்றான், நீ என்ன சொல்ற?"
ஆண் : "இரண்டுமா இருக்க. அதாவது `நல்லகோரமா' இருக்க" ------------------------------------------------------------------------

பையன் : "நான் பெரிய பணக்காரன் கிடையாது, அல்லது என் நண்பன் பிரண்ட் கோபி மாதிரி என்கிட்ட பெரிய காரோ வீடோ கிடையாது, ஆனா நான் உன்ன லவ் பண்றேன்"

பெண் : "நானும்தான், ஆனா உங்க நண்பர் கோபின்னு யாரையோ சொன்னீயே `அவர்' எங்க இருக்கார்?" ------------------------------------------------------------------------

காதலன் தன் காதலியை திருமணத்திற்கு சம்மதிக்க எப்படி கேட்பது என்று தெரியாமல்.
அவன் : "ஏன் டியர் நீ என் குழந்தைக்கு தாயாக ஆசைப்படறியா?"

அவள் : "நிச்சயமா! ஆமாம் உனக்கு எவ்வளவு குழந்தைங்க?"
"ஏண்டா, அந்தப் பொண்ணுக்கு தாமரைப்பூ கொடுத்தியே, திருப்பி என்ன கொடுத்துச்சு?"

"பளார்னு அவ கையால என் கன்னத்துல அறைஞ்சு, நீ பி.ஜே.பி.ன்னா, நான் காங்கிரஸ்h அப்படீன்னுடுச்சு" ------------------------------------------------------------------------

நண்பன்-1 : "பொதுவா உனக்கு நேர் எதிரான ஒரு பொண்ணை செலக்ட் பண்ணினா, லைஃப் சந்தோஷமா இருக்கும் தெரியுமா?"
நண்பன்-2 : "அதனாலதான் நல்ல பணமுள்ள பொண்ண தேடிட்டிருக்கேன்"
------------------------------------------------------------------------
"உன்ன கல்யாணம் செஞ்சுகிட்ட அப்புறமே உன் கணவர் சிவாஜி கணேசன் மாதிரி
ஆயிட்டார் டி"
"எப்படி சொல்ற?"
------------------------------------------------------------------------

"அதான், சிரிச்சுகிட்டே அழறார், அழுதுகிட்டே சிரிக்கிறாரே"
"உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு"
"இப்ப?"

"நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்"
------------------------------------------------------------------------
பெண் : "நீ என்னை `லவ்' பண்றியா?"
ஆண் : "யெஸ், டியர்"
------------------------------------------------------------------------

பெண் : "எனக்காக சாகக்கூட துணிவியா?"

ஆண் : இல்லை டியர், என்னோடது `சாகாத காதல்' ------------------------------------------------------------------------

அவன் : "என்ன வேணும்னாலும என்கிட்ட சொல்லு, கூச்சப்படாம சொல்லு, கூச்சப்படாத என்ன?"
அவள் : "சரி, முதல்ல வெளில போ"
------------------------------------------------------------------------
பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா, உங்களோட துக்கம், பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன்.
ஆண் : "எனக்கு துக்கம், பிரச்சனை எதுவும் இல்லை"

பெண் : "அவசவப்படாதீங்க, நாமதான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையே" ------------------------------------------------------------------------

"சார் உங்க பொண்ணு என் மேலே பைத்தியமா இருக்கா, அவளையே நான். . .
(அப்பா குறுக்கிட்டு)

"அவ ஒரு சரியான பைத்தியம்னா"

"அதான் சார் என் மேல பைத்தியம்"
"அதான் எப்படீன்னு புரியல"
------------------------------------------------------------------------

அம்மா : "ஏண்டீ டெய்லி வேற வேற பையன்களோட சுத்தரியே உனக்கு ஒரு கல்யாணம் நடக்க வேண்டாமா?"
மகள் : "ஒரு" கல்யாணம் நடக்காதும்மா.

இதில் மேலும் படிக்கவும் :