“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

FILE

வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.
‘‘இங்கே என்ன நடக்குது?’’
‘‘பைரேலி காலண்டர்’’
‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன?’’
போட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.
‘ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.’
ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ -டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.

ஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.
ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன்.

எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.
ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது.

மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், ‘தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்’ என்று நினைப்பேன்.
முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.

‘‘உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை’’ என்றார் டாக்டர்.
எல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.
இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.
‘இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்’ என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.
மீண்டும் வலி.

‘‘சித்தி! ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்’’
‘‘பார்த்து? என்னன்னு அவர்கிட்ட சொல்வே?’’
சித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.
‘ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக்காரனிடம் காட்டுவதா? எவ்வளவு பெரிய குற்றம்!’
காலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன். ஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக்கொண்டு டாக்டர் ‘மேக்ரே’வை சந்தித்தேன்.
‘‘டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன். எனக்கு…’’ அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை.
Webdunia|
மைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.
‘‘இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?’’‘‘ஆமாம்’’எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.‘‘எவ்ளோ பணம் தருவீங்க?’’‘‘ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’‘‘வாவ்…! நானா இது?’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.
‘‘இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா’’ என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :