மாஸ்டர் புதிய போஸ்டர் - மாளவிகாவிற்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:18 IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கு சர்ப்ரைஸ் ஆக மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த ரொமான்டிக் புகைப்படம் இணையத்தை ஈர்க்க அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Thank you Team #Master ! Love the new poster!இதில் மேலும் படிக்கவும் :