"காத்துவாக்குல ரெண்டு காதல்" பண்ணும் விஜய்சேதுபதி - போஸ்டர் ரிலீஸ்!

papiksha| Last Updated: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (14:06 IST)

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

இரண்டு பிரபல நாயகிகளை கொண்ட காதல் கதை என்பதால் இப்படம் நிச்சயம் ஸ்வாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலர் தினமான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டருடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வித்யாசமான கதையம்சத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் போஸ்டர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதை இயக்கும் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். நயன் விக்கி இணைந்த நானும் ரவுடி படத்தில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தற்போது இருவரும் காதலர்களாக இருக்கும் வேளையில் மீண்டும் இணைந்திருக்கும் இந்த கூட்டணி நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :