வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Geetha priya
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (11:36 IST)

காதல் என் காதல் அது கண்ணீரிலே...

நடிகரும் தயாரிப்பாளருமான அரசியல் வாரிசு தற்கொலைக்கு முயன்றதாக இரண்டு நாளாக கோடம்பாக்கம் குழம்பிப் போய் கிடக்கிறது. அவரது இந்த முடிவுக்கு காரணம் நம்பர் நடிகையுடன் அவருக்கு ஏற்பட்ட ஒருதலைக்காதல் என்றும் கிசுகிசுக்கின்றனர்.
 
நம்பர் நடிகையை வைத்து அவர் படம் தயாரித்த போதே காதல் சூரியன் உயிர்த்தெழுந்ததாகவும், அவருடன் இணைந்து நடித்த பிறகு அது உச்சிக்கு வந்ததாகவும் கூறுகின்றனர். தொடர்ந்து இரண்டாவது படத்திலும் நடிகையை அவர் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகே நடிகரின் காதல் நடிகைக்கு தெரிய வந்ததாம்.
 
பெரிய இடத்து பிள்ளையின் அதுவும் திருமணமாகி குழந்தை பெற்றுக் கொண்டவரின் காதல் என்னென்ன கஷ்டங்களை கொண்டு சேர்க்கும் என்பதை அறியாதவரல்ல நடிகை. அதனால் கறாராக நடிகரின் காதலை மறுக்க அந்த சொல்லே கல்லாகி காதல் கண்ணாடி டமாரானது. அதன் விளைவே நடிகரின் தற்கொலை முயற்சி என்கின்றனர்.
 
இவ்வளவு களேபரங்களுக்குப் பிறகும் நடிகரின் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் இல்லை. இந்த மௌனம் நடந்ததை நிஜம் என்று உணர்த்துவதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.