காமெடி கதையில் ஹீரோவாகும் ஒல்லி இசையமைப்பாளர்

Cauveri Manickam| Last Modified புதன், 3 மே 2017 (16:36 IST)
முருங்கைக்காய் மாதிரி இருந்தாலும், முருங்கைக்காய் சமாச்சாரத்தில் கெட்டியானவர் ஒல்லி இசையமைப்பாளர். ஆளாளுக்கு  ஹீரோவாக நடிக்கும்போது, உச்ச நட்சத்திரத்துக்கு ஒன்றுவிட்ட உறவான இவருக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன?


தான் இசையமைக்கும் பாடல் காட்சிகளில் தோன்றியவரை, ‘இப்போது ஹீரோவாகப் பார்த்துவிடலாம்… அப்போது ஹீரோவாகப்  பார்த்துவிடலாம்…’ என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள். 
 
ஆனால், சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமானதால், அந்த ஆசையை உடம்புக்குள் ஒரு ஓரமாக ஒளித்து வைத்திருந்தார் ஒல்லி. அந்த ஆசைக்கு இப்போது விடிவுகாலம் பிறந்திருக்கிறது. இயக்குநராக அறிமுகமாகத் துடிக்கும் ஒருவர்,  காமெடி கதையொன்றை ஒல்லியிடம் சொல்லி, ‘இதில் நீங்கதான் நடிக்க வேண்டும்’ என்று வேண்டி விரும்பி கேட்டுக்  கொண்டாராம். ஒல்லிக்கும் சம்மதம் தான் எனத் தகவல். அந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘ஜப்பான்’.


இதில் மேலும் படிக்கவும் :