‌சிறுவ‌ர்க‌ளி‌ன் லூ‌ட்டி

Webdunia| Last Modified புதன், 20 மே 2009 (16:01 IST)
டீச்சர் : ஏன் லேட்?
சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்

டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?

சிறுவன் : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்னு போர்டு வச்சுருந்தாங்க.


***

(போனில் தன் தந்தையைப் போல். . )
சிறுவன் : என் பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்.

ஹெட்மாஸ்டர் : ‌நீ‌ங்க யார் பேசறது?

சிறுவன் : நான்தான் என்னோட அப்பா பேசறேன்.

***

அப்பா : ப‌‌ரீ‌ட்சைல கேள்வி எ‌ல்லா‌ம் எப்படி இருந்தது?
மகள் : ரொம்ப ஈசி‌ப்பா

அப்பா : அப்றம் ஏன் வருத்தமா இருக்க

மகள் : கேள்வி எ‌ல்லா‌ம் ஈசிதா‌ன், ஆனா இந்த பதில்தான். .


இதில் மேலும் படிக்கவும் :