விரைவில் வாட்ஸ்அப் டூ லேன்ட்லைன்


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 17 ஜூலை 2016 (23:08 IST)
வாட்ஸ்அப் சமூக வலைதளமானது தற்போது அதிக வசதிகளுடன் உலகம் முழுவதும் அனைவரையும் கவர்ந்து நிலையில் வாட்ஸ்அப்பில் இருந்து லேன்ட்லைனுக்கு பேசி மகிழலாம்.

 

 
உலகின் எந்த மூலையிலும் நடக்கும் நிகழ்வுகளை புகைப்படம் மற்றம் வீடியோவுடன் உடனே பரிமாறிக் கொள்ளும் இந்த வசதி பெரு நகரங்கள் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் வெகுவாக சென்றடைந்துள்ளது. செல்போன் மூலம் முற்றிலும் இலவசமாக பயன்படுத்துப்படும் வாட்ஸ்அப் வசதியை பயன்படுத்துவதற்கு தற்போது கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை.
 
வாட்ஸ்அப் வசதி தற்போது செல்போன்களுக்கு இடையே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விரைவில் வாட்ஸ்அப்பில் இருந்து தரை வழி தொலைபேசிகளுக்கும் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 
4ஜி நெட்ஒர்க் வசதியுள்ள ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் டெலிபோன்களில் இவ்வசதி விரைவில் வர உள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :