வாட்ஸ் அப் பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள்

Caston| Last Modified செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:01 IST)
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அதில் உங்களுக்கு தெரியாத சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

* Archive chat இது குறிப்பிட்ட ஒரு சாட்டினை தற்காலிகமாக மறைத்து வைத்து பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை பயன்படுத்த நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து Archive chat பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சில குரூப் சாட்கள் உங்களை வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம்.

* கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த - Account - - Option ஐ க்ளிக் செய்து Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும்.

* சாட் மெனுவை அழுத்தி பிடித்தால் அவை Shortcut ஆக ஹோம் ஸ்கிரீனில் தெரியும்.

* வாட்ஸ் அப்பில் போட்டோ வீடியோ தானாக தரவிறக்கம் ஆவதை தடுக்க Settings - Chat Settings - Media auto download என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.

* உங்கள் குறுந்தகவல் படிக்கப்பட்ட சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) என்ற குறியீடை க்ளிக் செய்தால் போதுமானது.

* சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings - Account - Change Number Option-ல் புதிய நம்பரை சேர்த்து பயன்படுத்தலாம்.


இதில் மேலும் படிக்கவும் :