வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 26 மே 2016 (02:23 IST)

யாரை வேண்டுமானாலும் ஸ்மார்ட்போன் மூலம் ட்ரேஸ் செய்யலாம்

உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை எளிமையாக ஸ்மாட்போன் மூலம் ட்ரேஸ் செய்து கண்டுப்பிடிக்கலாம்.

 

 
ஸ்மார்ட் போன் மூலம் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்தும் சாத்தியமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளை சர்வசாதரனமாக பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. ஸ்மார்ட் போனை மனிதனின் மூன்றாம் கை, முக்கியமான கை என்றும் குறிப்பிடலாம்.
 
இப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மூலம் ட்ரேஸ் வசதியினைக் கொண்டு நாம் நினைபவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் அல்லாது அவர்களின் ஸ்மார்ட்போன் தொலைந்து போனாலும் கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது.
 
அதற்கு நாம் செய்ய வேண்டியவைகள்:-
 
முதலில் ட்ரேஸ் செயலியை உங்கள் ஸ்மார்ட்பொனில் நிறுவி கொள்ள வேண்டும். பின்னர் செயலியில் உள்நுழைந்து, சேவையையில் இணைந்து கொள்ளுங்கள்.
 
அதேபோல் யாரை ட்ரேஸ் செய்ய வேண்டுமோ அவர்களது ஸ்மார்ட்போனிலும் ட்ரேஸ் செயலியை நிறுவி உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
 
இந்த செயலி ஆன்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டுக்கும் உள்ளது. மேலும் இந்த செயலின் சேவையைப் பெற ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.