வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (14:46 IST)

டாடா மோட்டார்ஸ்ன் நான்கு புதிய கட்டுமான வாகனங்கள் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நான்கு புதிய வகை கட்டுமான வாகனங்களை பெங்களூரில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 


 


பெங்களூரில் கட்டுமான உபகரணங்கள், தொழில்நுட்பத்திற்கான தெற்கு ஆசியாவின் மிகப்பெரும் வர்த்தகக் கண்காட்சி "எக்ஸ்கான் 2015'  என்ற பெயரில் நடைப்பெற்று வருகிறது. இக்கண்காட்சியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம்,  கட்டுமான பிரிவில் நான்கு புதிய கட்டுமான மற்றும் சுரங்க வர்த்தகத்திற்கான  வாகனங்களை அறிமுகப்படுத்தியது.
 
இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்று பேசிய டாடா மோட்டார்ஸின் டிரக் வாகனங்களின் பிரிவு தலைவர் ராஜேஷ் கவுல்: கட்டுமான வர்த்தக வாகனங்களின் பிரிவில், டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள தேவையான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாகவே, "எக்ஸ்கான்' கண்காட்சியில், கட்டுமானம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தேவைப்படும், டாடா பிரைமா 3138-கே 32 கம் கோல் டிப்பர், டாடா பிரைமா எல்எக்ஸ் 2523-கே ரெப்டோ, டாடா பிரைமா எல்எக்ஸ் 3128-கே 19 கம் ஸ்கூப் எச்ஆர்டி, டாடா எஸ்.ஏ.கே. 1613 வாகனங்கள் ஆகிய 4 வாகனங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 
பெங்களூரில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கிய "எக்ஸ்கான் 2015' கண்காட்சி வரும் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.